-Photo file copy
இந்திய மருத்துவக் குழுவின் இலங்கை வருகைக்கு அந்த நாட்டு டாக்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இலங்கையில் பதிவு செய்யாத நிலையில் இந்திய டாக்டர்களும், நர்சுகளும் பணியாற்ற அனுமதி கொடுத்ததற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுரித்து இதுகுறித்து இலங்கை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் சிரிந்தா திசநாயகே கூறுகையில், இலங்கை மருத்துவ கவுன்சிலில், இந்திய டாக்டர்கள் பதிவு செய்து கொள்ளவில்லை. அதேபோல இந்தியாவிலிருந்து வந்துள்ள நர்சுகளும் இங்கு பதிவு செய்யவில்லை.
எனவே அவர்கள் அளிக்கும் சிகிச்சை முறைகள் குறித்து இலங்கை மருத்துவ கவுன்சில் கேள்வி கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய மருத்துவக் குழு நிர்மானித்துள்ள மருத்துவமனை அங்கீகாரமற்ற மருத்துவமனையாகவே கருதப்படும். எனவே அங்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து யார் கேள்வி கேட்பது என்று தெரியவில்லை. இலங்கை மருத்துவ சட்டத்திற்கு முரணாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே இந்திய மருத்துவக் குழு மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பது குறித்து யோசித்து வருகிறோம்.
இலங்கையிலேயே சிறந்த டாக்டர்கள் உள்ளனர். எனவே இந்தியாவிலிருந்து டாக்டர்களை அழைத்து வந்திருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அப்பாவி மக்களுக்கு சிகிச்சை அளிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை என்றார் திசநாயகே.
இந்தியாவிலிருந்து சென்றுள்ள டாக்டர்கள், நர்சுகள் அடங்கிய குழு புலமோடை என்ற இடத்தில் தற்காலிக மருத்துவமனையை நிர்மானித்துள்ளன. அங்கு தேவைப்படும் காலம் வரை தங்கியிருந்து அப்பாவி மக்களுக்கு சிகி்ச்சை அளிக்கலாம் என இலங்கை அரசு அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி
-தட்ஸ்தமிழ்
Headline
இந்திய மருத்துவக் குழு வருகை - இலங்கை டாக்டர்கள் அதிருப்தி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment