இடிந்த வீடுகள்
ஒடிந்த தீக்குச்சிக்ள்
ஓணாய் ஒலங்கள்
மனித அவலங்கள்
மரண கிடங்கில்
மனித சந்தோசம்
விழிக்கிற்றின் சாரளாங்களில்
மனித நேயத்தின் விழுப்புன்கள்
பல் விழுந்த கிழவியின்
பார்வையின் அகோரங்கள்
இழவு வீட்டின்
ஒப்பாரிகள்
கற்பிழந்த இழந்த
காமனின் பார்வையில்
மனிதததன்மையின்
விதவைக்கோலங்கள்
வெற்றிலை பாக்கின்
எச்சங்கள்
எங்களின் கனத
இதயததில் விழும்
நெருப்பு துண்டங்கள்.............
ஒடிவராமல் ஒட்டு போட்ட
எங்கள் உறவுக்ளின்
உண்ர்வுகளுக்கு வேட்டு வைத்த
ஒற்றுமை பந்தல்
ஒடிந்து போன கண்ணாடி
துண்டு
உருவத்தை காட்ட மறுக்கின்றன
முடிந்து போன இரவுகள்
எங்கள் மரணத்தை பற்றி
கவலை படுவதில்லை...
அன்பு சாசனத்தில்
இரத்த காட்டேறியின்
கை எழுத்து.....
விழ்ந்தது
இந்த உலகம்
இராவணின் கையில்.....
ஏய்॥
கேடுகெட்ட மனித....
இதற்கு என்ன
சொல்ல போகிறாய்.....
அன்பை போதி
அகிம்சையை போற்று
ஒரு கன்னததை காட்டினால்
மறு கன்னதை காட்டு॥
தன் உயிரை போல்
மன்னூயுரை நேசி...
பாழாய் போன
பழகி போன
இந்த
வார்த்தைகளுக்கு
மறு விசாரனை தேவை....
மனித நேய அகரதியில்..........
நன்றி
- கவிதை மனோகரன் கிருட்ணன்
குழலியின் சிறப்பு பதிவு
ஜெகத்கஸ்பர் அருட்தந்தையா? புளுகுமூட்டையா?
Headline
அருட்தந்தை ஜெகத்கஸ்பரும் ஆயா சுட்ட வடையும் !
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment