பாலுறவையும், பாலுறவு உணர்ச்சிகளையும் தூண்டக்கூடிய சாக்கலேட், ஸ்டிராபெர்ரி, பல்வேறு வகையான மூலிகைப் பொருட்களுடன் தற்போது நம்பமுடியாத வகையில் இணைந்திருப்பது கழுதைகளின் தோலில் இருந்து தயாரிக்கப்படும் மாத்திரைகள்.
ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம். நம்பித்தான் ஆக வேண்டும்.
சீனாவில் பாரம்பரிய மருந்துகளைத் தயாரிப்பதற்கு கழுதைகளின் தோலை பதப்படுத்தி அதில் இருந்து எடுக்கப்படும் பொருள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த மருந்தானது, பெண்களின் பாலுணர்வைத் தூண்டுவதாகத் தெரிய வந்துள்ளது.
தற்போது ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் கழுதை தோல்களை பாரம்பரிய மருந்துகளை தயாரிப்பதற்காக பயன்படுத்தி வருகிறது.
தென் அமெரிக்காவில் நீண்டகாலமாக கழுதை தோலில் இருந்து மருத்து தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவிலும் இந்த தயாரிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
சிட்னியைச் சேர்ந் தஅ ஏற்றுமதியாளர் ஜான் பிளெமிங், வெளிநாடுகளில் கழுதைகளை விற்பனை செய்வதற்காக கழுதை வேட்டையை விரும்புவதாகக் கூறியுள்ளார்.
மருந்து நிறுவனங்களுக்கு கழுதையின் தோல் தேவைப்படுவதாகவும், அதில் இருந்து வடிகட்டுதல் மூலம் பெறப்படும் ஒருவகைப் பொருளைக் கொண்டு பாரம்பரிய மருந்துகளை அந்நிறுவனங்கள் தயாரிப்பதாகவும் தெரிகிறது.
கழுதை தோலில் இருந்து எடுக்கப்படும் பொருள் `எஜியாவோ' என்றழைக்கப்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் `நு பாவ்' என்ற மருந்து பெண்களின் பாலுறவு உந்துதலைத் தூண்டுவதுடன், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைப் போக்க உதவுவதாகவும் தெரிய வந்துள்ளது.
கழுதை தோல் ஒன்று (பதப்படுத்தப்பட்டது) 30 அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
நன்றி
-வெப்துனியா
Headline
கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
கழுதைக்கு தெரியுமா கற்புர வாசனைன்னு இனி கழுதையை திட்ட முடியாது..
:-))
கழுதைக்கு தெரியுமா கற்புர வாசனைன்னு இனி கழுதையை திட்ட முடியாது..
:-))
கழுதைக்கு தெரியுமா கற்புர வாசனைன்னு இனி கழுதையை திட்ட முடியாது..
:-))
கழுதை படம் சூப்பர் தல
கழுதை படம் சூப்பர் தல
கழுதையையும் விடமாட்டானுக போல இருக்கே :-((
"கிரி said...
கழுதையையும் விடமாட்டானுக போல இருக்கே :-(("
வாங்க கிரி
இந்த முறை நமது பழைய சித்த மருத்துவதில் உள்ளது . அந்த கால அரசர்கள் பலர் இதை பயன்படுத்தியதற்கு பல சான்றுகள் உண்டு
இது தொடர் பல பாடல்கள் போகர் எழுதியுள்ளார்.
Post a Comment