Headline

எங்கள் வாழ்நாளில் பார்காத துயரங்கள் - பிரெஞ்சு மருத்துவர்கள்


வன்னி மக்களை ஆயிரக்கணக்கில் கொன்றுகுவித்துக் கொண்டிருக்கும் சிங்கள இராணுவமானது பல தரப்பட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை ஏவிவருவது இப்பொழுது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.


எரிசக்தி இரசாயன போர்கருவிளால் படுகாயமடைந்த மக்களுக்கு சிகிச்சையளித்த செட்டிகுளம், வவுனியா வைத்தியசாலை பிரெஞ்சு மருத்துவர்கள் இதை உறுதி செய்துள்ளனர். சர்வதேச மரபின்கீழ் இந்த இரசாயன ஆயுதமானது மக்கள் வாழும் இடங்களில் பாவிப்பது என்பது தடைசெய்யப்பட்டது என்று இங்கு மீண்டும் குறிப்பிடத்தக்கது.
இதுஇவ்வாறிருக்க, சிறிலங்கா அரசாங்கம் மீட்பு நடவடிக்கை இடம்பெறுவதாக கூறுகின்றது. ஆனால் தமிழ் பொதுமக்கள் செலுத்தியிருக்கும் அதிகவிலையை அங்கு நினைவாற்றல் இழந்தவர்களும், காயமடைந்தவர்களும் வெளிப்படுத்துவோராக காணப்படுகின்றனர் என்று செட்டிகுளத்தில் பிரான்ஸ் கள மருத்துவமனையில் பணியாற்றும் மைக்கேல் ஓர் செல் மருத்துவர் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.


இந்தத் தமிழ் மனிதரின் இதயத்திற்குப் பக்கத்தில் சன்னம் ஒன்று இருப்பதை 'எக்ஸ்ரே' காட்டியது. வன்னியில் மோதல் பகுதியிலிருந்து வெளியேறிய பல்லாயிரக்கணக்கானவர்களில் இவரும் ஒருவர். 6 மாதங்களுக்கு முன்னர் மார்பில் தனக்கு சூடு விழுந்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் இதனை எங்களால் அகற்றமுடியாது.
ஏனெனில் முழுமையாக இருதய சத்திர சிகிச்சை செய்யவேண்டியுள்ளது. என்று செட்டிகுளத்தில் பிரான்ஸ் கள மருத்துவமனையில் பணியாற்றும் மைக்கேல் ஓர் செல் மருத்துவர் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சத்திர சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர், ஏனைய அலுவலர்கள் 72 பேர் அடங்கிய குழுவினர் சுமார் 700 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இவர்களில் சுமார் 100 பேருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

சிறிலங்கா அரசாங்கம் மீட்பு நடவடிக்கை இடம்பெற்றதாக கூறுகின்றது. ஆனால் தமிழ் பொதுமக்கள் செலுத்தியிருக்கும் அதிகவிலையை அங்கு நினைவாற்றல் இழந்தவர்களும், காயமடைந்தவர்களும் வெளிப்படுத்துவோராக காணப்படுகின்றனர்.

கசப்பான இனமோதலானது இறுதிக்கட்டத்தை நெருங்கியபோது சாதாரண கிராமவாசிகள் ஆண்கள், பெண்கள், இளைஞர், முதியவர் சுடப்பட்டும் குண்டு, எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகியும், எரிகாயப்பட்டும் இருப்பதை அவர்களின் காயங்கள் வெளிப்படுத்துகின்றன.

தப்பிவந்த பொதுமக்களின் உடல்களில் இருந்த இயந்திரத் துப்பாக்கிச் சன்னங்கள், சிதறல்களைக் கண்டு தான் திகிலடைந்ததாக டானியல் சோஜொக்ஸ் என்ற மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

பத்து நாட்களில் 30 சன்னங்களை நாம் அகற்றியுள்ளோம். அவற்றில் 10 சன்னங்கள் சிறுவர்களின் தோள்பட்டையிலும் கால்களிலும் இருந்தன. ஒரு முதிய பெண்ணின் முழங்காலில் கூட ஒன்று இருந்ததென்று பிரான்ஸ் அரசின் நிவாரணக் குழுவில் இடம்பெற்றிருந்த பிரேட்ரிக் வாவ்டின் என்பவர் கூறினார்.

மற்றொரு காயமடைந்தவரான சுரேந்திரன் திரேசம்மா வயது 36 தனது மார்பு, தோள்களில் மருந்து கட்டியுள்ளார். இரு வாரங்களுக்கு முன்பு தான் இரசாயனக் குண்டினால் தான் எரிகாயமடைந்ததாக அவர் கூறியுள்ளார்.

இதேமாதிரியான காயங்களை தாங்கள் பார்த்ததாக பிரான்ஸ் மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலர் கைகளில் வெள்ளையாக உள்ளது. பொஸ்பரஸால் எரியுண்ட சாத்தியமாக இருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

கள மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள் எந்தவொரு தரப்பையும் சுட்டிக்காட்ட தயங்குவதாக ஏ.எவ்.பி. கூறியுள்ளது.

நன்றி
-தமிழ் செய்தி

0 comments: