Headline

கோயம்பத்தூரில் பரபரப்பு - ரணுவ வாகனம் தாக்கி அழிப்பு


ஈழத்தமிழினத்தினை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசுக்கு 80 சரக்குந்துகளில் போர் தளவாடங்களை இந்திய அரசு இன்று அனுப்புகிறது. அதை தடுக்கும் முயற்சியில் தமிழர்கள் இறங்கியுள்ளனர்.
ஈழத்தில் தமிழர்கள் மீதான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர் அரசானது தமிழகம் சேலம் , கோயம்பத்தூர் வழியாக போர் தளவாடங்களை 80 லாரிகளில் அனுப்புகிறது. சேலம் வழியாக செல்லும் பொழுது இதை கேள்விப்பட்ட தமிழுணர்வாளர்கள் அவ்வண்டிகளை தடுக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

தற்பொழுது கோயம்பத்தூரில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் அப்போர் தளவாடங்களை கொழும்புக்கு செல்லவிடாமல் தடுக்க கோவை L&T சாலையில் திரளான தமிழுணர்வாளர்கள் குழுமியுள்ளனர்.

நன்றி
-தமிழ்வின்

2 comments:

தெய்வம் said...

முயற்சிக்கு வாழ்த்துக்கள். இனிதே நடக்கட்டும்

ம்னோகரன் said...

தமிழ் மறவர்களே உங்களால் படை திரட்ட முடியும்.எழுமின் எழுமின் தமிழ் பகையை வெல்ல எழுமின்......
வெற்றி வேல் ....வீர வேல்....இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?