Headline

இலங்கைக்கு அமெரிக்கா வச்ச ஆப்பு


வன்னியில் இடம்பெயர்ந்து ''மக்கள் பாதுகாப்பு வலயத்தில்'' வாழும் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே சிறீலங்காவுக்கான நிதி உதவிகள் அனைத்துலக நாணய நிதியத்தினால் வழங்க இடமளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மோதல் தவிர்ப்பு வலயத்தில் வாழும் மக்களின் பாதுகாப்பை சிறீலங்கா அரசாங்கம் உறுதிப்படுதினால் மட்டுமே அனைத்துலக நாணய நிதியத்தினால் சிறீலங்காவுக்கு வழங்க இருக்கும் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அமெரிக்க அரசாங்கம் ஆதரவளிக்கும் என அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மக்கள் பாதுகாப்பு வலயத்தில் வாழும் மக்களின் பாதுகாப்பு குறித்து சிறிலங்கா அரசாங்கம் மிகக் குறைந்த நடவடிக்கைகளையே எடுத்துள்ளது. இதேநேரம் அப்பகுதியில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்துலக தொண்டு நிறுவனங்களை சிறீலங்கா அரசாங்கம் அனுமதிக்காமை மற்றும் அனைத்துலகக் கண்காணிப்பாளர்களை அனுமதிக்க தவறியுள்ளதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.


மேற்கூறப்பட்ட காரணங்களை முன்வைத்து 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அனைத்துலக நாணய நிதியம் ஊடாக வழங்குவதற்கான காலத்தை அமெரிக்க நீடித்துள்ளது.

6 comments:

கிரி said...

கடைசி படம் ... :-))))

puduvaisiva said...

"கிரி
கடைசி படம் ... :-))))"

வாங்க கிரி
இப்பதான் அமெரிக்கா ஆட்டத்தை தொடங்கி இருக்கான் இன்னும் சில நாட்களில் பிற நாட்டின் இலங்கைக்கான உதவிகள் தடைக்கு அதிக வாய்ப்பு இருக்கு.

கடைசி படம் நெட்டில் நாமம்ன்னு போட்டு தேடி கண்டுபிடிச்சது.

:-))))))))))))

Anonymous said...

India wills sure give the money.

puduvaisiva said...

"@ Anonymous
India wills sure give the money."

Yes it will happen Anony
because now the view of the war watch all country so compare to Indian money it is very High and
after the election anything happen

suppose new govt form means totaly have chance to stop.

கானா பிரபா said...

;)

கடைசி படம் ... :-))))

puduvaisiva said...

"கானா பிரபா
;)
கடைசி படம் ... :-))))"

வாங்க கானா பிரபா தங்கள் வருகைக்கு நன்றி.