Headline

நமீதா 'ஆசைகாட்டி' தொழிலதிபரிடம் கொள்ளை!




நடிகை நமீதாவைக் காட்டுவதாக ஆசைகாட்டி சென்னை தொழிலதிபரிடம் 15 பவுன் நகை மற்றும் ரூ. 3,000 ரொக்கத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்துள்ளது.

சென்னை தியாகராய நகர் சிவஞானம் தெருவை சேர்ந்தவர் சிவபரமன் (வயது 68). சென்னையில் ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் தரும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இரண்டு நாட்களுக்கு இவருக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஒரு பெண், தான் பிரபல சினிமா நடிகை நமீதா என்றும், தனக்கு நிலம் வாங்க உதவுமாறும் கேட்டாராம்.

இரண்டாவது முறை பேசும்போது, சிவஞானத்துக்கு தன்னிடம் 'பழக' ஆசை உள்ளதா என கேட்டு உணர்ச்சி வசப்படச் செய்துள்ளார். 'பழக' ஆசையிருந்தாலும், முன்பின் தெரியாத ஆளுக்கு எப்படி பண உதவி செய்ய முடியும் என அவர் கூறியுள்ளார்.

அதற்கு அந்த பெண், 'என்னுடைய கார் டிரைவரை அனுப்புகிறேன். அவருடன் கூடுவாஞ்சேரியில் உள்ள எனது கெஸ்ட் ஹவுசுக்கு வாங்க' என மயக்கும் குரலில் பேசினாராம்.

கண்களில், மனதில், எங்கும் நமீதாவே தெரிய, செலவுக்கு கையில் ரூ 3,000த்தை எடுத்துக் கொண்டு கூடுவாஞ்சேரி கெஸ்ட் ஹவுஸுக்குக் கிளம்பினார் சிவபரமன். அப்போது வீட்டுக்கு வெளியே ஒரு கார் அங்கு வந்து நின்றுள்ளது.

'மேடம் உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க' என்றாராம் கார் டிரைவர். சிவபரமனும் உற்சாகத்துடன் ஏறி உட்கார, கார் தியாகராய நகரில் இருந்து கூடுவாஞ்சேரியை நோக்கிப் பறந்தது.

தாம்பரம் அருகே காரில் மேலும் 3 பேர் ஏறி கொண்டனர். அவர்கள் சிவபரமனை அடித்து, உதைத்துள்ளனர். அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியையும், 5 பவுன் மோதிரங்களையும் ரூ.3,000த்தையும் பறித்துக் கொண்டனராம்.

பின்னர் வேகமாக சென்று கொண்டிருந்த காரில் இருந்து சிவபரமனை கீழே தள்ளிவிட்டனர். ரோட்டில் ரத்தக் காயத்துடன் வலியில் துடித்து கொண்டிருந்த அவரை அங்கிருந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் கடத்தப்பட்ட விபரம் கூடுவாஞ்சேரி மற்றும் மாம்பலம் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது.

துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில் உதவி கமிஷனர் கண்ணபிரான், இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சிவபரமனிடம் விசாரித்தனர்.

சபலம் சபலம்!..:

விசாரணையில் நடிகை நமீதா பெயரை பயன்படுத்தி ஒரு பெண் அழைத்ததால் ஆசையோடு சென்றேன். அவள் தனது கூட்டாளிகள் மூலமாக என்னைக் கடத்தி அடித்து உதைத்து நகை, பணத்தை பறித்து கொண்டாள். சபல புத்தியால் சங்கடத்தில் மாட்டிக் கொண்டேன் என்று போலீசாரிடம் உண்மையை ஒப்புக் கொண்டாராம்.

அவரது செல்போனில் பதிவாகி இருந்த செல்போன் நம்பரை வைத்து போலீசார் அந்த பெண்ணையும், அவளது கூட்டாளிகளையும் எளிதில் கண்டு பிடித்துவிட்டனர் போலீசார்.

நடன நடிகை எஸ்கேப்!:

சிவபரமனை கடத்திய கொடுங்கையூர் அப்துல்லா, அயனாவரம் ரஞ்சித், சாதிக், சேகர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ரஞ்சித் என்பவர்தான் கார் டிரைவராக வந்தவர்.

நடன நடிகை பானு என்ற ஜானுவை (28) நமீதா மாதிரி பேச வைத்து பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இவர் பல்வேறு படங்களில் நடனம் ஆடி உள்ளார். நடிகர்-நடிகைகளுடன் மலேசியா கலை நிகழ்ச்சியிலும் நடனம் ஆடி உள்ளாராம்.

கூட்டாளிகள் போலீசில் சிக்கிக் கொண்ட தகவல் தெரிந்ததும் நடன நடிகை பானு தப்பி ஓடி விட்டாராம். அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் ஆந்திரா சென்றுள்ளனர்.

நன்றி
- தட்ஸ்தமிழ்

2 comments:

குப்பன்.யாஹூ said...

நடிகை நமீதா பெயர் உள்ளே வந்ததா, நான் படித்த தினசரிகளில் இந்த செய்தி இல்லை, புதிய தகவல், நன்றி.

ஜொள்ளர்கள் இருக்கும் வரை ஏமாற்றங்கள் நடக்கும்.

குப்பன்_யாஹூ

puduvaisiva said...

"நடிகை நமீதா பெயர் உள்ளே வந்ததா, நான் படித்த தினசரிகளில் இந்த செய்தி இல்லை, புதிய தகவல், நன்றி.

ஜொள்ளர்கள் இருக்கும் வரை ஏமாற்றங்கள் நடக்கும்."


நன்றி குப்பன்_யாஹூ.