Headline

தேர்தல் பிரச்சார நோட்டீஸில் இலங்கை பிரச்சனை பற்றி அச்சடிக்க தடை



தமிழகத்தில் வருகிற மே 13-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் பணியை தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது.

தேர்தலை சுமூகமாக நடத்தவும், வாக்காளர்கள் அச்சமின்றி, குழப்பமின்றி வாக்களிக்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போது தேர்தல் பிரசாரத்துக்கு நோட்டீஸ் அடிக்கும் அச்சகங்களுக்கும் தேர்தல் தொடர்பாக வெளியிடும் நோட்டீஸ்கள், சுவரொட்டிகள் தொடர்பாகவும் புதிய விதிமுறைகளை தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.


* வன்முறை, கலவரங்களை ஏற்படுத்தும் விதமாக நோட்டீஸ் அடித்துக் கொடுக்கக்கூடாது.

* ஜாதி, மத அமைப்புகள் கொடுக்கும் உணர்ச்சியை, கிளர்ச்சியை தூண்டும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தாலும் அச்சடிக்கும் உரிமையை ஏற்றுக்கொள்ளக்கூடாது.

* மத உணர்வை தூண்டும் சட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் கேலி சித்தரங்களை அச்சடிப்பதை கை விட வேண்டும்.

* தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புக்கும், ஜனநாய கத்துக்கும் எதிரான சுவரொட்டிகள் அடிக்கவே கூடாது.

* இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து எவ்வித வாசகமும் இடம்பெறவே கூடாது.

* அச்சகங்கள் மற்றும் பிளக்ஸ் போர்டு தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் ஆர்டர்களை தங்கள் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தணிக்கை செய்து கொள்ள வேண்டும்.

நன்றி
நக்கீரன்

5 comments:

Jackiesekar said...

வேற எண்ணத்ததான் அடிக்கறதாம் தலை?

அமர பாரதி said...

இது ஜனநாயக நாடா இல்லை சர்வாதிகார நாடா? எதற்கெடுத்தாலும் போலீஸ் நிலையத்தில் அனுமதி வாங்க வேண்டுமென்றால் என்ன செய்வது?

puduvaisiva said...

"வேற எண்ணத்ததான் அடிக்கறதாம் தலை?"


வாங்க ஜாக்கி
நல்தோர் குடும்பம்
பல்கலை கழகம்.... அப்படி இருக்குமுனு நெனைக்கிறேன்
;-))))

puduvaisiva said...

"இது ஜனநாயக நாடா இல்லை சர்வாதிகார நாடா? எதற்கெடுத்தாலும் போலீஸ் நிலையத்தில் அனுமதி வாங்க வேண்டுமென்றால் என்ன செய்வது?"

வாங்க பாரதி
ஏமாளிங்க வாக்காளர் இருக்கரவரை - இந்த
கோமாளிங்க அரசியல் இப்படிதான் இருக்கும்.
;-))))))))))))))

சுந்தரவடிவேல் said...

முத்துக்குமரன் சொன்னது நடக்கிறது!
வரும் காலங்களில் தமிழகத்தில் கூர்க், பஞ்சாப் ராணுவ ரெஜிமெண்டுகளின் தாண்டவத்தைக் காணலாம்! முதலில் போலீஸ் அடக்குமுறை, அப்புறம் இராணுவ ஒடுக்குமுறை. ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதென்றால் சும்மா இல்லை அய்யா!