டிவி சீரியல்கள் எல்லாமே பெண்களுக்கு எதிராகவும், பெண்களை அடிமைப்படுத்தும் விதத்திலும் அழுகைத் தொடர்களாகவே உள்ளன. இவற்றில் கதை என்ற விஷயம் மருந்துக்கும் கிடையாது. இதைப் போய் மக்கள் எப்படித்தான் பார்க்கிறார்களோ என்று பொரிந்து தள்ளுகிறார் நடிகை த்ரிஷா.
சமீபத்தில் படப்பிடிப்பில் நிருபர்களை சந்தித்த த்ரிஷாவிடம் டிவி சீரியல்களில் நடிப்பது குறித்து ஒருவர் கேட்டுவிட, சடாரென்று சூடானார் த்ரிஷா.
"இப்போது வரும் டி.வி. சீரியல்களில் என்ன கதை இருக்கு? என் அம்மா எப்போதும் டி.வி. தொடர்களில் மூழ்கி கிடப்பார். ஒரு தொடரையும் விடமாட்டார். ஒரு வாரம் கழித்து டி.வி. தொடரை பார்த்தாலும் கதை நகராமல் அப்படியே நின்ற இடத்திலேயே நிற்கும். அதை போய் விழுந்து விழுந்து பார்க்கிறார்கள். இவற்றில் நடிப்பது பற்றி நான் எப்போதும் யோசிக்கக் கூட மாட்டேன்.
இன்னொன்று இந்தத் தொடர்கள் எல்லாமே பெண்களுக்கு எதிராகவே இருக்கு. பெண்ணா பிறந்துட்டா அடங்கிப் போகணும் அடுக்களையே கதின்னு கிடக்கணும்... எதிர்த்துப் பேசக்கூடாது... இதெல்லாம்தான் இந்த டிவி சீரியல்களில் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.
எல்லா தொடர்களிலும் யாராவது ஒரு கேரக்டர் தொடர்ந்து பெண்களுக்கு எதிராகவோ அல்லது அல்லது அடுத்தவர் வாழ்க்கையைக் கெடுப்பவர் போலவோ நிச்சமயம் வருவார்.
அடங்கிப் போகணும் எல்லை மீறக்கூடாது. வெளியே சுற்றக்கூடாது என்றெல்லாம் மகள்களுக்கு தாய்மார்கள் போதனை சொல்லும் காட்சிகளும் நிறைய வருகின்றன. பாட்டிமார்கள், தாய்மார்கள் எல்லோருமே இளம் பெண்களை கட்டுப்படுத்துவது போலத்தான் காட்சிகளை அமைக்கிறார்கள்.
ஆனால் பொதுவாகவே பெண்களின் இன்றைய நிலை பெரிதாக மாறியிருக்கிறது. என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்... எனக்கு பூரண சுதந்திரம் கொடுத்துள்ளார் என் அம்மா. என்னுடைய தோழிகளின் அம்மாக்களும் கூட அப்படித்தான்.
வெளியே போகக்கூடாது. அடக்கமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் எங்களை கட்டுப்படுத்தியது இல்லை கல்லூரி நாட்களில் படிக்கும் போது நல்லா படிப்பேன். ஓய்வு கிடைத்தால் அம்மாவிடம் சொல்லிவிட்டு தோழிகளுடன் சுற்ற கிளம்பி விடுவேன். என் தாய் தடுக்க மாட்டார்..." என்றார் த்ரிஷா.
த்ரிஷா சொன்னா சரியாத்தான் இருக்கும்!
நன்றி
- தட்ஸ்தமிழ்
Headline
பெண்களுக்கு எதிராக டிவி சீரியல்கள் - த்ரிஷா
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
"அடங்கிப் போகணும் எல்லை மீறக்கூடாது. வெளியே சுற்றக்கூடாது" இவ்வாறெல்லாம் பெண்களை அடக்கும், அடிமைப்படுத்தும் காலம் என்றுதான் முடியும்.
நல்ல பதிவு
Post a Comment