திருச்சி அருகே உள்ள விராலிமலையில் பாத்திமா ஆசிரம் நடத்தி வந்தவர் சாமியார் பிரேமானந்தா. பிரேமானந்தா ஆசிரமத்தில் இருந்த பிரேமகுமாரி உள்பட 2 பெண்களை கற்பழித்தார் என்றும் ரவி என்பவரை கொன்று புதைத்தார் என்றும் புகார் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1994 முதல் கடலூர் மத்திய சிறையில் இருந்து வரும் பிரேமானந்தா 14 வருடம் சிறை தண்டனையை அனுபவித்து முடித்துவிட்டார்.
அவ்வப்போது பரோலில் விடுதலையாகி பாத்திமா அசிரமத்துக்கு வந்து செல்வார். பிரேமானந்தா சிறையில் இருந்தாலும் ஆசிரமத்தில் உள்ள பள்ளி தொடர்ந்து நடந்து வருகிறது. பூஜைகளும் நடக்கின்றன.வெளிநாட்டு பக்தர்களும் வந்து செல்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரேமானந்தா ஒரு ஆயுள் தண்டனை முடிந்து விட்டதால் தன்னை விடுதலை செய்யும்படி கோர்ட்டை அணுகினார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் தனது ஆசிரமத்தில் நடக்கும் சிவராத்திரி பூஜையில் பிரேமானந்தா கலந்துகொள்வது வழக்கம். இந்த ஆண்டும் சிவராத்திரி பூஜைக்காக 6 நாள் பரோலில் பிரேமானந்தா ஆசிரமத்துக்கு வந்தார்.
கடந்த 21-ந்தேதி காலையில் ஆசிரமத்துக்கு பிரேமானந்தா வந்தார். நேற்று சிவராத்திரியையொட்டி ஆசிரமத்தில் சிறப்பு பூஜை நடந்தது.
இந்த பூஜையில் பங்கேற்ற பிரேமானந்தா வழக்கம்போல தனது வாயில் இருந்து லிங்கம் எடுத்தார். இதை பார்த்ததும் பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
நன்றி
- நக்கீரன்
Headline
பரோலில் வந்த பிரேமானந்தா வாயில் இருந்து லிங்கம் எடுத்தார்!
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அதை அவரு ஆசிரமத்துகுல்ல வந்து தான் எடுப்பாரா? ஜெயிலிலேயே எடுக்கலாமுல்ல?
அண்ணாத்தே word verificationஜ நீக்கவும்..
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
சந்தோஷ்!!!
அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. தெய்வக் குத்தமாயிடும். மூனுமுறை கன்னத்தில போட்டுக்கோ!
எங்கே எடுத்தாலும் சிவலிங்கம் தானே எடுத்தார். அவருடைய முகத்தில தெய்வ களை தெரியுதே!
ஒரு கொலைக்கும், இரண்டு கற்பளிப்பிற்கும் தண்டனையா? காந்தி பிறந்த மண்ணில ஜனநாயகம் செத்துப்போயிடுச்சு!!
புள்ளிராஜா
"அதை அவரு ஆசிரமத்துகுல்ல வந்து தான் எடுப்பாரா? ஜெயிலிலேயே எடுக்கலாமுல்ல?
அண்ணாத்தே word verificationஜ நீக்கவும்.."
வாங்க சந்தோஷ்
'ஜெயிலிலேயே எடுத்தா புனிதம்
போச்சினு நினைத்து இருக்கலம். :-))
சிறு உதவி
நான் இப்போதுதன் இந்த பதிவை தொடங்கி இருக்கிறேன்
நீங்கள் குறிப்பிட்டுள்ள
''word verificationஜ நீக்கவும்.''
அதை எப்படி நீக்குவது என்பதை விளக்கவும் நன்றி
நன்றி
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்.
"சந்தோஷ்!!!
அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. தெய்வக் குத்தமாயிடும். மூனுமுறை கன்னத்தில போட்டுக்கோ!
எங்கே எடுத்தாலும் சிவலிங்கம் தானே எடுத்தார். அவருடைய முகத்தில தெய்வ களை தெரியுதே!
ஒரு கொலைக்கும், இரண்டு கற்பளிப்பிற்கும் தண்டனையா? காந்தி பிறந்த மண்ணில ஜனநாயகம் செத்துப்போயிடுச்சு!!
புள்ளிராஜா"
நன்றி புள்ளிராஜா
Post a Comment