Headline

காயமடைந்த வக்கீல்களுக்கு 5ஆயிரம் உதவி!




சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சேதங்கள் குறித்து ஆராய ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஞானபிரகாசம் தலைமையில் ஒரு கமிட்டியை தமிழக அரசு அமைத்துள்ளது.


இந்த கமிட்டி ஒரு மாதத்திற்குள் தன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும்.


இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரை முருகன் ’மோதல் சம்பவத்தில் காயமடைந்த வக்கீல்களுக்கு மருத்துவ உதவிக்காக ரூ.5000 இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.



அவர் மேலும் 19.2.09 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக இரு தரப்புக்கும் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கண்டற்வதற்கான ஓய்வு பெற்ற நீதியரசர் ஞானப்பிரகாசம் தலைமையில் தமிழக அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.


அதையொட்டி முதலமைச்சர் கலைஞர், அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முன்னாள அமைச்சர் பூங்கோதை ஆகியோரை மருத்துவமனைகளுக்கு அனுப்பி காயமடைந்த இரு தரப்பும் பார்த்து வந்து முதலமைச்சரிடம் நிலைமைகளை விளக்கியதன் தொடர்ச்சியாக பின்வரும் அறிவிப்பினை முதல்வர் கலைஞர் அவையிலே வைக்கச்சொல்லியிருக்கிறார்கள்.

நீதியரசர் ஞானப்பிரகாசம் குழுவின் அறிக்கை வருவதற்கு சில நாட்கள் ஆகும் என்பதால் இடைக்கால உடனடி நிவாரணமாக காயம்பட்டவர்களுக்கு 5ஆயிரமும் வாகனங்கள் சேதம் அடைந்தோருக்கு அவற்றை பழுது பார்ப்பதற்காக அவரர்களுக்கு ஏற்ப இழப்பிற்கு ஏற்பவும் உதவித்தொகை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

நன்றி
- நக்கீரன்

0 comments: