
கரீபியன் தீவு நாடுகளின் ஒன்றான ஹைட்டியில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.0 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஹைட்டி நாட்டை இந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக தெரிவித்த அமெரிக்க அதிகாரிகள், இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் சாலைகளில் அநாதையாக கிடப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் விரிவான தகவலுக்கு நக்கீரன்
நன்றி
- நக்கீரன்
Headline
தீவு ஹைட்டி- ல் இன்று மிக பெரிய நிலநடுக்கம் - வீடியோ
0 commentsநமீதாவின் புத்தாண்டு (2010) ஆசைகள்
4 comments
இந்தப் புத்தாண்டிலாவது, கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கும் தன்
உடம்பைக் குறைத்து சிக்கென்று ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை நமீதா.
ஒவ்வொரு ஆண்டும் பிரசவ வைராக்கியம் மாதிரி நடிகர் நடிகைகளும் தங்கள் சபதங்களை பட்டியல் போடுவார்கள். அது நிறைவேறியதா இல்லையா என்று யோசித்துப் பார்ப்பதற்குள் அடுத்த புத்தாண்டு வந்துவிடும். பாவம் அவர்கள் என்ன செய்வார்கல்...!
இதோ அப்படி நமீதா போடும் 2010 சபதம்...
"இந்த நியூ இயர்ல நான் எடுக்கும் முதல் உறுதி, இனி எந்த விருந்துக்கும் போவதில்லை என்பதுதான்.
புத்தாண்டு முதல் யோகாவில் அதிகமாய் ஈடுபட்டு உடம்பை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன்.
சைவ உணவுக்கு மாறவேண்டும் என்பதும் என் விருப்பமாக உள்ளது. இந்த சிக்கனை விடுவதுதான் பெரும் சவாலாக உள்ளது. ஆனாலும் முயற்சிக்கப் போகிறேன்.
நிறைய நேரங்களை குடும்பத்தினருடன் செலவிடப் போகிறேன்.
ஷாப்பிங் போவதை குறைத்துக் கொள்வேன்..." என்றார்.
அவரது ஆசைகள் நிறைவேற வாழ்த்துவோம்!
நன்றி
-சிவாஜிடிவி
காமடி
இனி ரேஷன் கார்டுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
2 comments
புதிய ரேஷன் கார்டுகளுக்கு இனி ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்துகிறது தமிழக அரசின் உணவுத்துறை.
தமிழகம் முழுக்க போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசு பல லட்சம் கார்டுகளைப் பிடித்தது. இவற்றில் சந்தேகத்துக்கிடமான கார்டுகளின் எண்களை இணையதளத்தின் மூலம் சரிபார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
போலி ரேஷன் கார்டு நீக்கும் பணி மற்றும் கார்டுகளுக்கு கால நீட்டிப்பு வழங்கும் பணி நடந்து வந்ததால், புதிய கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இன்னும் பல லட்சம் மக்கள் ரேஷன் கார்டு பெறாமல் உள்ளதால் அவர்களுக்கு புதிய கார்டுகள் வழங்கும் பணியை மீண்டும் துவங்குமாறு அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.
இதைத் தொடர்ந்து புதிய கார்டுகள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
புதிய ரேஷன் கார்டுகளுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இணைய தளத்தில் விண்ணப்பங்கள் தரப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களைப் பிரிண்ட் அவுட் எடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.
இதுவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி இல்லாமல் இருந்தது. புது கார்டுகள் கேட்டு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், இனி ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தமிழக அரசின் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இனி ரேஷன் கடைகளில் காய்கறி வாங்கலாம்
மேலும் செய்திக்கு தட்ஸ்தமிழ்
நன்றி
-தட்ஸ்தமிழ்
கவுண்டர் கலக்கல் காமடி