Headline

நாய் துரத்தியதால் சிறுவன் மாடியிலிருந்து விழுந்து பலி

0 comments

சென்னையில், நாய் துரத்தியதால் பயந்து போன சிறுவன், நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

நாயை பொறுப்பின்றி மாடியில் உலவ விட்டிருந்த விமானப் பணிப்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம், இந்தியன் ஏர்லைன்ஸ் குடியிருப்பில், நான்காவது பிளாக்கில் வசித்து வருபவர் சீனிவாசன். இவர், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவரின் மனைவி அஞ்சனா. இவர்களுக்கு ஆசிஷ் அரவிந்த் (11) என்ற மகனும், ஷிவானி (4) என்ற மகளும் உள்ளனர்.

ஆசிஷ் அரவிந்த், கேந்திர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். தேர்வு முடிந்து முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில், தேர்ச்சி பெற்ற ஆசிஷ் அரவிந்த், அடுத்த பிளாக்கில் வசிக்கும் தனது மாமா சங்கர்ராவ் வீட்டிற்கு சென்று இனிப்பு வழங்கினான்.

அதன் பின்னர் நான்காவது மாடிக்குச் சென்று அங்கிருந்த தனது நண்பனுடன் சேர்ந்து விளையாடியுள்ளான்.

அதே பிளாக்கில், விமான பணிப்பெண்களாக வேலை பார்க்கும் நமீதா நாயக் (25), அவரின் சகோதரி சமீதா நாயக் (22) ஆகியோர் வசித்து வந்தனர். இருவரும் டாபர்மேன் ரக நாயை வளர்த்து வருகின்றனர்.

இரவு நேரத்தில் நாயை மாடியில் உலவ விடுவார்களாம்.
நேற்று முன்தினம் நமீதா நாயக் வேலைக்கு சென்றிருந்தார். வீட்டில் இருந்த சமீதா நாயக் வழக்கம்போல் இரவில் நாயை மாடியில் விட்டார்.

இந்த சமயத்தில்தான் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆசிஷ் அரவிந்த்தை நாய் துரத்தியது. பயந்து போன சிறுவன் வேகமாக ஓடியுள்ளான். அப்போது நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தான்.

உடனடியாக அவனை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

நாயை பொறுப்பின்றி மாடியில் உலவ விட்ட விமான பணிப் பெண் சமீதா நாயக் கைது செய்யப்பட்டார்.

சிறுவன் ஆசிஷ் அரவிந்த் தனது கண்களை தானம் செய்ய ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தான். அதற்காக பதிவும் செய்து வைத்திருந்தான். இதையடுத்து அவனது கண்கள் தானமாக எடுக்கப்பட்டன.

இச்சம்பவம் ஏர்லைன்ஸ் குடியிருப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி
-தட்ஸ்தமிழ்


ரோம் போப்பின் கருத்துக்கு எதிர்ப்பு

2 commentsபோப்பாண்டவர் பெனடிக்ட் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஆணுறை பயன்பாடு குறித்த விஞ்ஞானபூர்வ ஆதாரங்களைக் குலைப்பதாய் அமைந்துள்ளதாகவும் அவர் அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் உலகின் முன்னணி மருத்துவ சஞ்சிகை ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.

ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் பிரச்சினையை ஆணுறைகள்தான் அதிகமாக்குகின்றன என்று சென்ற வாரம் விமானத்தில் ஆப்பிரிக்கா சென்ற வேளையில், செய்தியாளர்களிடையில் பேசிய போப்பாண்டவர் கூறியிருந்ததை ஆத்திரம் வரவழைக்கும் விதமான மிகவும் தவறான கருத்து என்று லான்செட் சஞ்சிகையின் தலையங்கம் கண்டித்துள்ளது.

இது முன்னெப்போதுமில்லாத வகையில் மிகக் கடுமையான ஒரு தலையங்கம் என்று பிபிசியின் ரோம் நகர செய்தியாளர் கூறுகிறார்.

''பெரும் செல்வாக்குடைய ஒரு நபர், அறிவியல் ரீதியில் பிழையான ஒரு கருத்தை சொல்லும்போது ஏராளமானவர்கள் அதனால் பாதிப்படையக்கூடிய ஆபத்து இருக்கிறது. அவர்கள் தம்முடைய தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும்'' என்று லான்செட் தெரிவித்துள்ளது.

நன்றி
செய்தி.காம்


நடிகை ரம்பா தி.மு.கவுக்கு தேர்தல் பிரச்சாரமா??

2 comments
நடிகை ரம்பா முதல்வர் கருணாநிதியை இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார்.


தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நீதிபதிகளில் ஒருவராக இடம் பெற்றிருக்கிறார் ரம்பா.


இன்று காலை நடிகை ரம்பா முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்கான காணரம் குறித்து செய்திகள் வெளியாகவில்லை. எனினும் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக இச்சந்திப்பு நடந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி
நக்கீரன்


நான் கை அசைத்தால் தமிழ்நாடே ஸ்தம்பித்து போகும்- விஜயகாந்த்

4 comments


நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் பிரசாரம் செய்தபோது தேமுதிகவினர் பேனர்களை வைக்க விடாமல் தடுத்த இன்ஸ்பெக்டருடன் விஜயகாந்த் கடும் வாக்குவாதம் புரிந்தார்.

கடையநல்லூரில் தேமுதிக பிரசாரக் கூட்டம் நடந்தது. அப்போது போலீஸாருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார் விஜயகாந்த்.

அவர் கூறுகையில், எனது பிரசாரத்திற்காக தேமுதிக பேனரை வைக்க போலீசார் அனுமதி மறுத்து வருவதாக தொண்டர்கள் என்னிடத்தில் கூறினர். நான் போலீஸ் துறையினருக்கு மரியாதை கொடுத்து வருகின்றேன். அந்த மரியாதையை காப்பாற்ற அவர்களுக்கு தெரியவில்லை.

நான் கை அசைத்தால் தமிழ்நாடே ஸ்தம்பித்து போகும். நடுரோட்டில் உட்கார்ந்து போராடவும் தயங்கமாட்டேன்.

கட்சி தலைவர்கள் பிரசாரத்திற்கு வரும்போது பேனர் வைக்கலாம் என விதிமுறை இருந்தும் போலீசார் அனுமதி மறுப்பது ஏன்...என்றார்

விஜயகாந்த் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் பேனர்களை வைக்க தடை செய்வதாக தொண்டர்கள் கூறினர்.

இதையடுத்து அங்கு நின்றிருந்த இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாரை அழைத்து விஜயகாந்த் கோபமாக பேசினார்.

பேனர் வைக்க அனுமதி மறுப்பது ஏன்...யார் சொல்லி பேனர் வைக்க அனுமதி மறுக்கீர்கள் என சராமரி கேள்வி கேட்டார்.

அதற்கு இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் இனிமேல் பேனர் வைக்க அனுமதி அளிக்கின்றேன் என்றார். ஆனால் கோபம் குறையாத விஜயகாந்த் என்னுடைய பிரச்சாரம் இங்கு முடிந்துவிட்டது. இனிமேல் அனுமதி அளித்து என்ன பயன் என்றார்.

பின்னர் மாவட்ட செயலாளர் திருப்பதியை அழைத்து இதுகுறித்து உடனே தமிழக தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தாவுக்கு பேக்ஸ் அனுப்புமாறு கூறினார். இந்த சம்பவத்தால் கூட்டத்தில் திரண்டிருந்த தொண்டர்களிடேயே பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி
-தட்ஸ்தமிழ்


வெளிநாட்டு குட்டி பிசாசு - வீடியோ

2 comments

தமிழ் பாட்டுக்கு ஆட்டம் போடும் நம்ப ஊர் பெண்ணும் வெளிநாட்டு மங்கையும்.


சீமான் பரோலில் வருகிறார்

0 comments

சிறைக்குப் போகுமுன், தன்னால் தயாரிப்பாளர் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் மாயாண்டிக் குடும்பத்தார் படத்தின் தன் பகுதிகள் முழுவதையும் நடித்துக் கொடுத்துவிட்ட இயக்குநர் சீமான், இப்போது படத்திற்கு, டப்பிங் பேசுவதற்காக பரோலில் வருகிறார்.

ராசு மதுரவன் இயக்கும் இந்தப் படத்தின் மணிவண்ணனின் மகனாக நடிக்கிறார் சீமான். உண்மையில் மணிவண்ணனிடம் பல ஆண்டுகள் உதவியாளராக இருந்தவர்தான் சீமான்.

போலீஸார் தன்மீது வழக்குப் பதிந்துள்ளது தெரிந்ததும், இந்தப் படத்தில் தனது பகுதிகளை மட்டும், சரணடைவதற்கு முன்பே நடித்துக் கொடுத்து உதவியிருக்கிறார் சீமான். இதைச் செய்ததற்குத்தான் அவருக்கு ஓடி ஒளிந்தார் என்ற பட்டப் பெயர் கிடைத்தது. பின்னர் தேசிய பாதுகாப்புத் தடுப்புச் சட்டத்தில் புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் இருப்பதால் படத்துக்கு இன்னும் சீமான் டப்பிங் பேசவில்லை. இதையடுத்து அவரை பரோலில் அழைத்து வந்து டப்பிங் பேச வைக்க முயற்சி செய்து வருகின்றனர். சீமானும் பரோலில் வர ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கான விண்ணப்பங்களையும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சிறைத்துறையினரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

இதுகுறித்து இயக்குநர் ராசு மதுரவனிடம் கேட்டபோது, 'படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இது குடும்பம், காதல் சென்டிமென்ட் கொண்ட கதை. சீமான் டப்பிங் பேச வேண்டியிருக்கிறது. அதற்காக அவரை பரோலில் எடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அவர் டப்பிங் பேசியதும் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் படம் ரிலீஸ் ஆகும்' என்றார்.

இந்தப் படத்தில் தருண்கோபி, சீமான், பொன்வண்ணன், நந்தா பெரியசாமி, ஜெகநாத், மணிவண்ணன் உட்பட 10 இயக்குனர்கள் நடிக்கின்றனர். தமிழரசி, பூங்கொடி ஹீரோயின்களாக அறிமுகமாகின்றனர். சபேஷ்முரளி இசை அமைக்கிறார்.

நன்றி
-தட்ஸ்தமிழ்


ஏப்ரல் 1 முதல் எந்த ஏடிஎம்மிலும் பணம் எடுக்கலாம்- இலவச சேவை

2 commentsவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில், 2009 ஏப்ரல் 1ம் தேதி முதல் எந்த வங்கியின் ஏடிஎம்மில் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.

இதன்மூலம், அடுத்த மாதம் 1ம் தேதி முதல் வேறு வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் இப்போது பிடிக்கப்படும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. எனவே, அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள் எதனுடைய ஏடிஎம்மிலும் கார்டை நுழைத்து கட்டணம் இன்றி பணத்தை எண்ணியபடி வெளியேறலாம்.

தவிர, பண இருப்பை அறிவது, சுருக்கமான கணக்கு ஸ்டேட்மென்ட்டின் பிரின்ட் பெறுவது என அனைத்து சேவைகளும் ஏற்கனவே உள்ளதுபோல இலவசமாக நீடிக்கும்.

எனினும் இத்திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. பெரிய வங்கிகளுக்கு லாபம்: ஏடிஎம் சேவைக்காக வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ஆண்டுதோறும் வங்கிகள் ரூ.99 வரை பிடிக்கின்றன.

அதில் மற்ற எந்த வங்கிகளின் ஏடிஎம்மை தனது வாடிக்கையாளர் பயன்படுத்தினாலும் அவ்வங்கிகளுக்கு கட்டணம் செலுத்துகின்றன. அதன்படி எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி போன்ற பெரிய வங்கிகள் அதிக ஏடிஎம்களை கொண்டுள்ளதால் அவற்றை பயன்படுத்தும் பிற வங்கி வாடிக்கையாளர்கள் மூலம் லாபத்தை அதிகரித்துக் கொள்ள வழியேற்பட்டுள்ளது.

நன்றி
நக்கீரன்


நடிகர் ஜுனியர் என்.டி.ஆருக்கு படுகாயம்

0 comments


தெலுங்கு தேசம் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக விளங்குபவர், ஜுனியர் என்.டி.ஆர். இவர், மறைந்த என்.டி. ராமராவின் பேரன்.

இவர், தெலுங்கு தேசம் கட்சிக்காக, கடந்த 12-ந் தேதி பிரசாரத்தை தொடங்கினார்.

தெலுங்கு புத்தாண்டு விழாவை, தனது குடும்பத்தினருடன் கொண்டாட அவரும், அவரது நண்பரும், நடிகருமான ராஜீவ் கனகலாவும் காரில் நேற்று இரவு, ஐதராபாத் நோக்கி வந்து கொண்டு இருந்த போது, மோதே என்ற இடத்தில் வந்தபோது, ரோட்டை விட்டு இறங்கி கவிழ்ந்து விட்டது.

இந்த விபத்தில், ஜுனியர் என்.டி.ஆருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருடன் காரில் இருந்த ராஜீவ் கனகலாவும் காயம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து, இருவரும் ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜுனியர் என்.டி.ஆருக்கு சிறிய ஆபரேஷன் செய்யப்பட்டது. ஜுனியர் என்.டி.ஆரை, தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம்கட்சி பாராளுமன்ற தலைவர் எர்ரன் நாயுடு, மற்றும் தலைவர்கள் பார்த்து, உடல் நலம் விசாரித்தனர்.

நன்றி
நக்கீரன்


வீட்டு வாடகை செலுத்தாத ஐஏஎஸ் அதிகாரிகள்

2 commentsமாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஐஏஎஸ் அதிகாரிகள், அதிகாரிகள், ஊழியர்களுக்கு தமிழக அரசு வாடகைக்கு வீடு ஒதுக்குகிறது.

இப்போது குடியிருப்பவர்கள் பலரும் சரியாக வாடகை செலுத்தாமல் உள்ளனர். அந்த வகையில் அரசுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வரவேண்டி உள்ளது.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரங்கமணி, ரூ.11.53 லட்சம் பாக்கி வைத்துள்ளார். அவர் ஓய்வூதியத்தில் இருந்து 43 தவணைகளில் வசூல் செய்ய அரசு உத்தரவிட்டும் ரூ.20,000 மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் பீலா ராஜேஷ் ரூ.7.78 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளார். இதில் சமீபத்தில் ரூ.52,000 வசூல் செய்யப்பட்டது.

பொதுத்துறை கூடுதல் செயலாளராக இருக்கும் வீரசண்முகமணியின் வாடகை பாக்கி ரூ.7.76 லட்சம். இதில் கடந்த டிசம்பர் மாதம் ரூ.13,000 வசூலிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை செயலாளர் பிரபாகர ராவின் வாடகை பாக்கி ரூ.11.16 லட்சம். இதில் கடந்த டிசம்பர் மாதம் ரூ.18,600 மட்டும் வசூலாகி உள்ளது.

மத்திய நிதித்துறை இணை செயலாளர் சக்திகாந்ததாஸ் வாடகை பாக்கி ரூ.7.90 லட்சம். இவரிடம் எதுவுமே வசூலிக்கப்படவில்லை.

இப்படி ஐஏஎஸ் அதிகாரிகளின் வாடகை பாக்கி ரூ.45.32 லட்சமாக உள்ளது. அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்களின் வாடகை பாக்கி ரூ.30.91 லட்சம். இதுபோல் தமிழகம் முழுவதும் அரசுக்கு வரவேண்டிய வாடகை ரூ.1 கோடியை தாண்டிவிட்டது. இதையடுத்து, வாடகை பாக்கி உள்ள அதிகாரிகளுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நன்றி
நக்கீரன்


விரக்தியின் விளிம்பிற்கே சென்றுவிட்டார் கலைஞர் - ராமதாஸ் குற்றச்சாட்டு

4 comments

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை இதோ


அறிக்கை மேல் கிளிக் செய்யவும்


நன்றி
நக்கீரன்


காக்கா பிரியாணி கோவையில் பீதி !

2 commentsகோவையில் சிக்கன் பிரியாணி என்ற பெயரில் காக்கா பிரியாணி விற்கப்படுவதாக எழுந்துள்ள புகாரையடுத்து வனத்துறையினர் காக்கா வேட்டையில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில் உண்மையை ஒப்புகொண்ட அவர்கள் ஹோட்டல் முதலாளிகளையும் கைகாட்டி உள்ளனர்.

இதையடுத்து ஹோட்டல்களில் விசாரணை நடந்து வருகிறது.

கோவை மதுக்கரையில் உள்ள ஹோட்டல்களில் சிக்கன் பிரியாணிக்கு என்ற பெயரில் காக்கா பிரியாணி போடப்படுவதாகவும், இதற்காக சிலர் மதுக்கரை-நீலம்பூர் பைபாஸ் ரோடு பகுதிகளில் வேட்டையாடி வருவதாகவும் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோவை ரேஞ்சர் சவுந்தரராஜன், பாரஸ்டர் பழனிச்சாமி, நடராஜன் மற்றும் வனத்துறையினர் நேற்று மாலை அங்கு சென்று சோதனை நடத்தினர். காக்கை வேட்டையில் மும்முரமாக இருந்த நான்கு பேரை கைது செய்தனர். அவர்கள் தோள் உரித்து பிரியாணிக்கு தயாராக வைத்திருந்த 25 காகங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை அந்த இடத்திலே குழி தோண்டி புதைத்தனர்.

வனத்துறையினரின் விசாரணையில் அவர்கள் சிறுமுகை ஆலாங்கொம்பை சேர்ந்த முத்துமாலை (25), மதுரை மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி (20), கிருஷ்ணன் (60), உரிச்சான் (40) என கூறியுள்ளனர். காக்கைகளை வேட்டையாடி குறைந்த விலைக்கு அங்குள்ள ஹோட்டல்களுக்கு சப்ளை செய்து வந்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு தலா ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து சில ஹோட்டல் உரிமையாளர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

நன்றி
-தட்ஸ்தமிழ்


கொழும்பை உலுக்கிய குண்டுச் சத்தங்கள்

8 comments

tiger+submarine Pictures, Images and Photos


- photo file copy-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பையே உலுக்கும் வகையில் இன்று காலையில் கேட்ட குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களுக்கு கொழும்பு துறைமுகப் பகுதியில் இடம்பெற்ற போர் ஒத்திகையே காரணம் என அந்நாட்டு கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 நிமிடம் தொடக்கம் சுமார் ஒரு மணி நேரத்துக்குத் தொடர்ச்சியாக இந்தச் சத்தங்கள் கேட்டன.

துறைமுகப்பகுதியில் இருந்து கேட்ட இந்த பாரிய சத்தங்களால் கொழும்பு நகரில் தாக்குதல் ஒன்று நடைபெறுகின்றதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது.

கொழும்புத் துறைமுகத்தை அடுத்துள்ள பகுதிகளில் திடீரென கடற்படையினரும் குவிக்கப்பட்டு வீதிகளும் மூடப்பட்டன.

இதனால் துறைமுகப் பகுதியில் தாக்குதல் ஏதாவது நடைபெறுகின்றதா என்ற அச்சம் அதிகரித்தது.

இருந்த போதிலும் தாக்குதல் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் துறைமுகத்தின் மீது தாக்குதல் ஒன்று தொடுக்கப்பட்டால் அதனை எவ்வாறு முறியடிப்பது என்பது தொடர்பான போர் ஒத்திகை ஒன்றே நடைபெற்றதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி: புதினம்


இங்கிலாந்து டிவி நடிகை ஜேட்கூடி மரணம்

2 commentsபிரபல இங்கிலாந்து டிவி நடிகை ஜேட் கூடி புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தனது வாழ்நாளில் இறுதிக் கட்டத்தில் இருந்த அவர் இன்று மரணம் அடைந்தார்.

பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியின் மூலம் அவர் மிகவும் பிரபலமானார். ஜேட் கூடி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை இனவெறியோடு திட்டியதாக சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி
நக்கீரன்


புதிய தமிழீழ பாடல் - youtube-ல்

0 comments


ராகுல் காந்தி ஒரு "கழுகுக் குஞ்சு":தெலுங்கு தேசம் தாக்கு

3 commentsகாங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தியை கழுகுக் குஞ்சு என தெலுங்கு தேசம் தாக்குதல் தொடுத்துள்ளது.முன்னதாக,தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் மறைந்த என்.டி.ஆரின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர்.பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார்.இவரது கூட்டங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர்.காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவதே எங்களது பணி என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி,ஜூனியர் என்.டி.ஆர் ஒரு காக்கைக் குஞ்சு என குறிப்பிட்டது.

இந்நிலையில்,தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் ராஜகுமாரியிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியது:

காங்கிரஸின் பிரசாரக் கூட்டங்களுக்கு போதிய கூட்டம் வராததால் அவர்கள் ஜூனியர் என்.டி.ஆரை பார்த்து காக்கைக் குஞ்சு என பழிக்கிறார்கள்.அவர் காக்கைக் குஞ்சு அல்ல.காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தியும்,ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் ரெட்டியும் தான் கழுகுக் குஞ்சுகள்.

காங்கிரஸுக்கு ஆதரவாக கட்சி நிறுவனர் என்.டி.ஆரின் மனைவி லஷ்மி சிவபார்வதி,பிரசாரம் செய்து வருகிறார்.காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என முழங்கிய என்.டி.ஆரின் ஆத்மா,சிவபார்வதியை மன்னிக்காது என்றார்.

நன்றி செய்தி.கொம்


இந்தியாவின் உதவியுடன் புலிகளுடனான போரில் வெற்றி பெற்றோம்: இலங்கை அமைச்சர் நிமல் சில்வா

0 commentsவிடுதலைப்புலிகளுடனான போரில் இலங்கை ராணுவம் வெற்றி பெறுவதற்கு இந்திய அரசாங்கமே மிகப்பெரிய உதவி செய்தது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சபையின் முதல்வரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார் என்று விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையதளம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது, இந்திய அரசாங்கத்தின் உதவிகள் இல்லாமல் இருந்திருந்தால் விடுதலைப்புலிகளை போரி ல் வென்றிருக்க முடியாது. இலங்கை மக்கள் இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நன்றி
நக்கீரன்


திமுக கூட்டணியே வெல்லும்-ஜோதிடர்கள் கணிப்பு

6 comments-photo file copy

தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும், தேசிய அளவில் பாஜகவின் வெற்றிக்கு மாயாவதி மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருப்பார் என்றும் பிரபல ஜோதிடர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர்.

பிரபல ஜோதிடர் டாக்டர் எஸ்.வி.நகந்த், ஜோதிடர் டாக்டர் எஸ்.எம்.சிலகுரி, ஜோதிடர் டாக்டர் எஸ்.சதுர்வேதி, ஜோதிடர் பி.மதன்லால், ஜோதிடர் வி.ராதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள கணிப்பில்,

தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி பலம் கிடைக்காது. பாஜகவை விட காங்கிரசுக்கு சில இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும்.

மத்தியில் மீண்டும் கூட்டணி ஆட்சி தான் ஏற்படும். ஆனால் இது அதிக நாள் நீடிக்காது. விரைவிலேயே ஆட்சி கவிழும்.

தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவுக்கு தற்போதைய கிரக நிலைகள் சாதகமாக இல்லை. பாஜகவுக்கு கர்நாடகத்தில் நல்ல வெற்றிகிடைக்கும். ஆனால் அத்வானி ஜாதகத்தின்படி அவருக்கு ராசியான திசை எதுவும் இல்லை. இதனால் அவர் பிரதமர் பதவியில் அமர முடியுமா என்பது சந்தேகமே. அதே நேரத்தில் சோனியா காந்திக்கு கிரக அமைப்புகள் சாதகமாக உள்ளன.

பாஜகவின் வெற்றிக்கு மாயாவதி தான் மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருப்பார். காங்கிரசுக்கு ஆந்திராவில் தான் கணிசமான வெற்றிகிடைக்கும்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கே அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும். பிகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் பெரும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி
-தட்ஸ்தமிழ்


இலங்கை ராணுவத்திற்கு புதிய வீரர்கள் சேர்க்க முடிவு - சரத் பொன்சேகா

2 commentsஇலங்கை ராணுவத்தின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதால், ராணுவத்திற்கு மேலும் ஏராளமான வீரர்கள் சேர்க்கப்படுவர் என்று ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

கொழும்பு அம்பேபுஸ்ஸா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ராணுவத்தின் பலம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் பல்வேறு வெற்றிகள் கிடைத்துள்ளன.

இதன் காரணமாக ராணுவத்திற்கு மேலும் பலரை எடுக்கவுள்ளோம்.

நாட்டின் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் எந்தவித மிரட்டலையும் சமாளிக்கும் வகையிலான ராணுவமாக இலங்கை ராணுவம் திகழும்.

கடந்த காலங்களில் போர்க்களத்தில் வீரர்கள் ஆற்றிய பணி, சேவை மகத்தானது. ஓய்வுக்குப் பின்னர் அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்க அரசு உதவும். ராணுவத்தினர் மீதான மக்களின் எண்ணமும் கூட பெருமளவில் மாறியிருக்கிறது.

வீரர்களின் ஓய்வூதியத்தை, அவர்களது சம்பளத்தின் 85 சதவீதமாக உயர்த்திட நடவடிக்கை எடுத்துள்ளார் அதிபர் ராஜபக்சே என்றார் பொன்சேகா.

ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கப் போவதாக கூறுகிறார் பொன்சேகா. ஆனால் வடக்கில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் உயிரிழந்திருப்பதால்தான் ஆள்பற்றாக்குறையை சமாளிக்க மேலும் பல வீரர்களை இலங்கை ராணுவம் எடுப்பதாக கருதப்படுகிறது.

நன்றி
-தட்ஸ்தமிழ்


சட்டம் 356ன் படி தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வக்கீல்கள் கோரிக்கை

6 commentsதமிழக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு 356 வக்கீல்கள் தந்தி அனுப்பியுள்ளனர்.

கடந்த 19ம் தேதி உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் தாக்கப்பட்டது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரி மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதால் மாநில அரசை சட்டம் 356ன் படி கலைக்க வேண்டும் என்று கோரி 356 வழக்கறிஞர்கள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு தந்தி அனுப்பியுள்ளனர்.

கருணாநிதிக்குக் கண்டனம்:

இதற்கிடையே இன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்ட குழு தலைவரும், உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவருமான பால் கனகராஜ் கூறுகையில், வக்கீல்கள் போராட்டம் குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கருத்து கேட்க பட்டபோது, நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர் பிரச்சனையாக இது உருவாகி இருப்பதாக கருத்து கூறியுள்ளார்.

இது பிரச்சனையை திசை திருப்பும் முயற்சியாகும். போலீசாரை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறோம். நீதிபதிகளோடு எந்த பிரச்சனையும் இல்லை. இந்நிலையில் முதல்வர், நீதிபதி களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பிரச்சனை என்று கூறி திசை திருப்ப முயன்றிருப்பது கண்டனத்திற்குரியது.

உயர்நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் வசதிக்காக இரண்டு சட்ட உதவி மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. வழக்குகள் தொடர்பான உதவிகளை பொதுமக்கள் இந்த மையங்களின் மூலம் பெறலாம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

நன்றி
-தட்ஸ்தமிழ்


கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் விபத்தில் படுகாயம்

0 comments
வேலூர் அருகே நடந்த கார் விபத்தில் திமுக மகளிர் அணி செயலாளரும், பேச்சாளருமான கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் படுகாயம் அடைந்துள்ளார்.

வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் டிரைவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி
நக்கீரன்


யு.எஸ்.படைகளை அனுப்பி தமிழர்களை வெளியேற்ற இந்தியா எதிர்ப்பா?

0 comments
வன்னிப் பகுதிக்கு அமெரிக்காவின் பசிபிக் கமாண்ட் படைகளை அனுப்பி தமிழர்களை வெளியேற்றும் திட்டததிற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வன்னியில் விடுதலைப் புலிகளின் பகுதியில் இருக்கும் லட்சக்கணக்கான தமிழர்களை வெளியேற்ற அமெரிக்காவின் பசிபிக் கமாண்ட் படைப் பிரிவின் உதவியை இலங்கை நாடியுள்ளது.

அப்படி செய்யும்போது விடுதலைப் புலிகளுக்கும், அமெரிக்கப் படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அதன் மூலம் இந்தப் பிரச்சினையில் அமெரிக்காவையும் இழுத்து விடலாம் என்ற எண்ணம் இலங்கைக்கு.

இலங்கையின் இந்த திட்டத்திற்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த தமிழர் அமைப்பும் இந்தத் திட்டத்தை அமெரிக்கா கைவிட வேண்டும் என கோரியுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் இந்த அமெரிக்கப் படைத் திட்டத்திற்கு இந்தியாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வன்னியில் உள்ள மக்களை பலவந்தமாக வெளியேற்றுவதற்கு இந்திய அரசாங்கம் முன்னர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. இதன் பின்னர் அமெரிக்காவின் பசிபிக் கமாண்ட் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

ஆனால், மக்களை பலவந்தமாக வெளியேற்றுவதை விடுதலைப் புலிகள் எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த முயற்சிகளுக்கு இந்திய அரசு தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் மக்களை வெளியேற்ற வேண்டும் என இந்தியா விரும்புகின்றது.

இந்தியாவின் இந்த நிலைப்பாடு இலங்கைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்தே வன்னியில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கு சர்வதேச படைகளை பயன்படுத்துவதில்லை என்ற அறிவிப்பை இலங்கை அரசு தெரிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா. குற்றச்சாட்டுக்கு இலங்கை மறுப்பு

இந்த நிலையில், வட இலங்கையில் விடுதலைப் புலிகளும், இலங்கைப் படைகளும் போர்க் குற்றங்களை மேற்கொண்டு வருவதாக ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை தெரிவித்த கருத்துக்களை இலங்கை அரசு மறுத்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை மனித உரிமைத் துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே கூறுகையில்,

இலங்கை படையினரின் தாக்குதல்களினால் 2 ஆயிரத்து 800 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்த கருத்துக்கள் தவறானவை. இது விடுதலைப் புலிகளின் தகவல்களை ஆதாரமாக கொண்டவை.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அறிக்கையால் நாம் ஏமாற்றம் மட்டும் அடையவில்லை; கவலையும் அடைந்துள்ளோம்.

ஐக்கிய நாடுகள் சபையின் தெரிவித்துள்ள தகவல்கள் ஆதாரமற்றவை; பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டதை சிறிலங்கா மறுக்கவில்லை. ஆனால், தெரிவிக்கப்பட்ட எண்ணிக்கைகள் அதிகமானவை. பொதுமக்கள் மீதான விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை பிள்ளை தனது அறிக்கையில் புறக்கணித்துள்ளார் என்றார் அவர்.

நன்றி
-தட்ஸ்தமிழ்


இந்திய மருத்துவக் குழு வருகை - இலங்கை டாக்டர்கள் அதிருப்தி

0 comments


-Photo file copy

இந்திய மருத்துவக் குழுவின் இலங்கை வருகைக்கு அந்த நாட்டு டாக்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இலங்கையில் பதிவு செய்யாத நிலையில் இந்திய டாக்டர்களும், நர்சுகளும் பணியாற்ற அனுமதி கொடுத்ததற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுரித்து இதுகுறித்து இலங்கை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் சிரிந்தா திசநாயகே கூறுகையில், இலங்கை மருத்துவ கவுன்சிலில், இந்திய டாக்டர்கள் பதிவு செய்து கொள்ளவில்லை. அதேபோல இந்தியாவிலிருந்து வந்துள்ள நர்சுகளும் இங்கு பதிவு செய்யவில்லை.

எனவே அவர்கள் அளிக்கும் சிகிச்சை முறைகள் குறித்து இலங்கை மருத்துவ கவுன்சில் கேள்வி கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய மருத்துவக் குழு நிர்மானித்துள்ள மருத்துவமனை அங்கீகாரமற்ற மருத்துவமனையாகவே கருதப்படும். எனவே அங்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து யார் கேள்வி கேட்பது என்று தெரியவில்லை. இலங்கை மருத்துவ சட்டத்திற்கு முரணாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே இந்திய மருத்துவக் குழு மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பது குறித்து யோசித்து வருகிறோம்.

இலங்கையிலேயே சிறந்த டாக்டர்கள் உள்ளனர். எனவே இந்தியாவிலிருந்து டாக்டர்களை அழைத்து வந்திருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அப்பாவி மக்களுக்கு சிகிச்சை அளிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை என்றார் திசநாயகே.

இந்தியாவிலிருந்து சென்றுள்ள டாக்டர்கள், நர்சுகள் அடங்கிய குழு புலமோடை என்ற இடத்தில் தற்காலிக மருத்துவமனையை நிர்மானித்துள்ளன. அங்கு தேவைப்படும் காலம் வரை தங்கியிருந்து அப்பாவி மக்களுக்கு சிகி்ச்சை அளிக்கலாம் என இலங்கை அரசு அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி
-தட்ஸ்தமிழ்


மலேசியா அதிரடி இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற முடிவு?

0 commentsகோலாலம்பூர்: வெளிநாட்டுத் தொழிலாளர்களை, குறிப்பாக இந்தியத் தொழிலாளர்களைத் திரும்பி அனுப்பும் 'திருப்பணி'யை மலேஷியாவும் தொடங்கிவிட்டது.

இதன் முதல்கட்டமாக மலேஷியாவில் பணியாற்றும் இந்திய, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வரி மற்றும் இன்சூரன்ஸ் தொகையை இரட்டிப்பாக்கியுள்ளது மலேஷிய அரசு. இந்தத் தகவலை மலேஷிய மனித வளத்துறை அமைச்சர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுப்பிரமணியம் மேலும் கூறியதாவது:

மலேசியாவில் தோட்டத் தொழில், கட்டுமானத் தொழில் மற்றும் சேவைத் துறைகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொடர்ந்து அனுமதிகக்கப்படுவார்கள். ஆனால் இவை தவிர்த்த பிற துறைகளில் படிப்படியாகக் குறைக்கப்படும். உள்ளூர் தொழிலாளர்களுக்கே அதிக முக்கியத்துவம் தருவோம்.

அடுத்த ஆண்டுக்குள் இப்போதுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர் எண்ணிக்கையை 5 லட்சமாகக் குறைத்து விடுவோம். மலேஷியாவில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி இங்குள்ள வெளிநாட்டுத் தொழிலாளர் எண்ணிக்கை மட்டும் 22 லட்சம். இது சட்டப்பூர்வ கணக்கெடுப்புதான். சட்டவிரோதமாக உள்ளவர் எண்ணிக்கை 10 லட்சம். இந்த 32 லட்சம் தொழிலாளர்களை 5 லட்சமாகக் குறைப்பதே இப்போது அரசின் முன் உள்ள சவால்.

அதற்காகத்தான் வரியை அதிகமாக்கியுள்ளோம். மாதம்தோறும் 30 ஆயிரம் பணியாளர்களின் வொர்க் பர்மிட்டுகள் காலாவதியாகின்றன. ஆனால் இவற்றைப் புதுப்பிப்பதில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை 3 லட்சம் பணியாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு, அக்டோபர் 1-ம் தேதி முதல் மலேசியத் தொழிலாளர்கள் 28,000 பேர் வேலைகளை இழந்துள்ளனர். மேலும், ஒரு லட்சம் மலேசியர்கள் தாற்காலிகமாக வேலையை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

வேலை அளிக்கும் சில தொழில் அதிபர்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்கள் தினமும் 12- 24 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். இதன் காரணமாகவே உள்நாட்டுத் தொழிலாளர்கள் வேலையிலிருந்து வெளியேற வேண்டியுள்ளது.

ஆனால் இந்தியா, வங்கதேசம், இந்தோனேஷியா போன்ற நாடுகளிலிருந்து மலேசியாவுக்கு வந்து பணியாற்றும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தினமும் 10 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றுகின்றனர். இதனால்தான் முதலாளிகள் மலேஷியர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை.

இந்திய உணவகங்களில் உள்நாட்டுத் தொழிலாளர்களைப் பயன்படுத்த முடியும். இருப்பினும், சமையல் உள்ளிட்ட வேலைகளுக்கு இந்தியாவிலிருந்துதான் தொழிலாளர்களை வரவழைக்கின்றனர் என்றார் சுப்பிரமணியம்.

தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு:

மலேசிய அரசின் இந்த புதிய முடிவுக்கு மலேஷிய உணவகங்கள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மலேசிய முஸ்லிம் உணவகங்களின் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜமருல்கான் காதிர் கூறுகையில், அரசின் இந்த முடிவால், இந்திய முஸ்லிம்கள் மற்றும் சீனர்களால் நடத்தப்படும் 25,000 உணவகங்களில் பணியாற்றும் 3.75 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களும், உள்நாட்டுத் தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மட்டுமல்லாது உள்நாட்டுத் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர். எங்களது உணவகங்களுக்குத் தேவையான பொருள்களை வழங்குபவர்களும் பாதிக்கப்படுவர். உணவகத் தொழில் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கியது. வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான வரியை இரண்டு மடங்கு செலுத்துவதோடு, அவர்களுக்கான மருத்துவ விசா கட்டணம், இன்சூரன்ஸ் தொகையும் செலுத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.

மலேஷியாவில் உள்ள இந்திய உணவகங்கள் சங்க தலைவர் ராமலிங்கம் பிள்ளையும் மலேஷிய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மலேஷிய அரசின் இந்த முடிவால் பெருமளவு பாதிக்கப்படுவோர் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்களே என்பது குறுப்பிடத்தக்கது.

நன்றி
-தட்ஸ்தமிழ்


கலைஞர் டைரி:- என் படத்தை எரிக்கிற அளவுக்கு என்ன வஞ்சனை செய்தேன்?

2 comments
ராமச்சந்திரா மருத்துவமனை அனுபவம் குறித்து முதல்வர் கருணாநிதி எழுதி வைத்துள்ள டைரி குறிப்புகளை ஐந்தாவது நாளாக வெளியிட்டுவருகிறார்.


18-2-09:


அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து ஏடுகளில் பாராட்டுகள் வந்திருந்தன. எதிர்க்கட்சிகள் ஏதாவது குறை சொல்ல வேண்டுமே என்பதற்காக ஒன்றிரண்டை சிரமப்பட்டு தேடி அறிக்கையாக கொடுத்திருந்தார்கள். சிலர் குறை கூற முடியாமல், தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை என்று கூறி, மறைமுகமாக அது நல்ல அறிக்கைதான் என்பதை ஒப்புக்கொண்டார்கள். ஜெயலலிதா நீண்ட அறிக்கை விடுத்திருந்தார். அவரும் தேர்தலை மனதிலே கொண்டு தயாரிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை என்று கூறியிருந்தார்.


‘திருமணத்திற்காக எடுத்த பட்டுப் புடவைதான்’ என்ற தலைப்பில் எதிர்க்கட்சியினர் தெரிவித்திருந்த குறைபாடுகளுக்கு விளக்கங்களை எழுதினேன்.


டெல்லி சென்ற இலங்கை தமிழர் நல உரிமை பேரவை துணைக் குழுவினர் சோனியா காந்தியை சந்தித்து மனு கொடுத்துவிட்டு, அங்கிருந்து தொலைபேசி மூலமாக தகவல் கூறினர்.


மக்களவையில் அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை தாக்கல் செய்திருப்பதாகவும், முல்லைத்தீவு பகுதியில் சிக்கியுள்ள 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதற்கான உதவிகளை செய்ய இந்தியா தயாராக இருப்பதாக கூறியதாகவும் எனக்கு தகவல் கூறினார்கள்.


ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நீதி மன்றத்தில் தாக்கப்பட்டது குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் கே.பி. ஜெயினை தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்த முகோபாத்யாயாவிடம் வருத்தம் தெரிவிக்கக் கூறினேன்.


அந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகளை அழைத்து கேட்டபோது, சம்பவம் தொடர்பாக சட்டக் கல்லூரி போலீசார் 20 வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும், இரவு 10.30 மணி அளவில் வழக்கறிஞர் கினிலியோ இம்மானுவேல் என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்கள்.


புலனாய்வுத் துறை ஐ.ஜி.யை அழைத்து, சுவாமியை தொடர்பு கொண்டு, உயர்நீதிமன்ற சம்பவத்திற்காக நான் வருத்தம் தெரிவித்ததாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறச் செய்தேன்.


சில நாட்களாக சரியான உறக்கம் இல்லாததாலும், வலது காலில் எரிச்சல் இருந்ததாலும் நரம்பியல் நிபுணர் ஏ.வி. சீனிவாசன் வரவழைக்கப்பட்டார். அவர் பழைய மருந்துகள் சிலவற்றை மாற்றி விட்டு புதிய மருந்துகள் கொடுத்தார்.
மார்த்தாண்டம் குழுவினர் அறுவை சிகிச்சை புண்ணை பரிசோதித்து விட்டு நன்றாக ஆறி வருவதாக கூறினர்.


19-2-09:


இன்று காலையிலிருந்து உடல் நிலை நன்றாக இருந்தது. டெல்லியிலிருந்து வரவழைக்கப்பட்ட முதுகுத்தண்டு கவசத்தை பொருத்தி சரி பார்த்தார்கள். அதற்காக முதன் முதலாக உட்கார வைக்கப்பட்டேன்.


பிற்பகலில் மருத்துவமனைக்கு வந்த செய்திகள் சரியாக இல்லை. உயர்நீதிமன்றத்தில் காவல் துறையினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல். தொலைபேசி வாயிலாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருந்தன.


சுப்பிரமணியன் சுவாமி தாக்கப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 20 வழக்கறிஞர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதை தவிர மீதமுள்ள வழக்கறிஞர்கள் சரண் அடைவதாக கூறி, காவல் நிலையத்திற்கு வந்த பிறகு ‘நாங்கள் கைதாக தயாராக இருக்கிறோம். ஆனால் வழக்கறிஞர்களை தாறுமாறாக பேசிய சுவாமி மீதும், அவருடன் வந்த ராதாராஜன் மீதும் நாங்கள் கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.


காவல் துறையினர் அதற்கு ஒப்புக்கொள்ளவே, வழக்கறிஞர் ரஜினிகாந்த் என்பவர் புகார் கொடுத்துள்ளார். போலீசார் அதனை பெற்று வழக்கு பதிவு செய்து நகல் கொடுத்துள்ளனர்.


‘உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டோம். இப்போது கைதாக வேண்டியவர்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என காவலர்கள் கேட்டபோது, ‘சுவாமியை வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தால்தான் நாங்கள் கைதாவோம்’ என்று புதிய கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதையட்டித்தான் வாக்குவாதம் தொடங்கி மோதலில் முடிந்தது.


நிலைமை மோசமாவதை அறிந்து நானே புறப்பட்டு செல்லலாமா என்று யோசித்தேன். மருத்துவர்கள் கண்டிப்பாக அந்த நிலையில் செல்லக் கூடாது என்றார்கள்.தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளரை உடனடியாக நீதி மன்றத்திற்கு சென்று தலைமை நீதிபதியை சந்தித்து பேசும்படி கூறினேன். அவர்களும் அவ்வாறே சென்றார்கள். டி.ஜி.பி., கமிஷனர் ஆகியோரையும் போகச் சொன்னேன். கமிஷனர் அங்கேதான் இருப்பதாக தகவல் கிடைத்தது.


தலைமை நீதிபதியுடன் தொலைபேசியில் பேச முயன்றேன். போன் கிடைக்கவில்லை. ஒரு கடிதம் எழுதினேன். எதிர்பாராத சம்பவம் நடைபெற்றுவிட்டது.

இது பற்றி எடுத்துக் கூற தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரை அனுப்பியுள்ளேன். தாங்கள் என்னைப் பார்க்க விரும்பினால் ஆம்புலன்சில் வரத் தயாராக இருக்கிறேன் என்று எழுதி பேக்ஸ் மூலம் அனுப்பினேன்.தலைமைச் செயலாளரும், உள்துறை செயலாளரும் நீதி மன்றத்திலிருந்து போன் செய்து, தலைமை நீதிபதி இதுபற்றிய வழக்கினை சி.பி.ஐ.க்கு அனுப்ப வேண்டுமென்று எண்ணுவதாக கூறினர். உடனடியாக அதற்கு ஒப்புக் கொள்ள சொன்னேன். அதையடுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.


இதற்கே இரவு 10 மணியாகிவிட்டது. தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., கமிஷனர், புலனாய்வுத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து நீதிமன்ற நிகழ்ச்சிகளை பற்றி விளக்கினார்கள். அடுத்த நாள் சட்டமன்றத்தில் நிலைமைகளை விளக்கி அறிக்கை வைக்க இரவே அறிக்கை தயாரித்தேன்.


20-2-09:


இன்றைய ஏடுகளில் நீதிமன்ற நிகழ்ச்சிகள் அதிக இடம் எடுத்துக் கொண்டிருந்தன. எதிர்க்கட்சி தலைவர்கள் அறிக்கை கொடுத்திருந்தார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் 356வது பிரிவை பயன்படுத்தி, ஆட்சியை கலைக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்திருந்தார்.


சட்டப் பேரவையிலும் நீதி மன்ற சம்பவங்கள் பெரிதாக எழுப்பப்பட்டது. கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க கோரினர். விதி இடம் கொடுக்காது என்று கூறியும் கேட்கவில்லை. அ.தி.மு.க. வினர் வெளிநடப்பு செய்தனர். பா.ம.க. தொடர்ந்து குரல் எழுப்பியதால் வெளியேற்றப்பட்டனர். சட்டத்துறை அமைச்சர் விரிவான அறிக்கை படித்த போதிலும், அனைத்து எதிர்க்கட்சிகளும் கூச்சல், குழப்பம் ஏற்படுத்த முயற்சித்ததால் வெளியேற்றப்பட்டனர்.


20ம் தேதி ஏடுகளில் கொட்டை எழுத்து செய்தி வந்திருந்தது. ஜெயலலிதா ஒரு திருமண விழாவில் பேசியதை அனைத்து ஏடுகளுமே காங்கிரஸ் கட்சிக்கு ஜெயலலிதா அழைப்பு என்று தலைப்பிட்டு வெளியிட்டு இருந்தன.


காங்கிரஸ் கட்சியை பிடிக்காமல் இந்திய கம்யூனிஸ்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் தி.மு.க. அணியிலிருந்து பிரிந்து ஜெயலலிதா வீட்டிற்கு சென்று பேச்சு நடத்தியிருக்கிறார்கள். அந்த நிலையில், ஜெயலலிதா திடீரென்று காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு என்ற பெயரில் பேசியிருந்தார்.


சைவப் பெருமாட்டி உப்புக் கண்டத்தை பறி கொடுத்ததை போல இரண்டு கம்யூனிஸ்ட் காரர்களாலும் என்ன நடக்கிறது என்றே புரிந்து கொள்ள முடியாத நிலை. அதைப்பற்றி அன்று நான் அறிக்கை எழுதி முடிக்கவே நீண்ட நேரம் ஆகிவிட்டது.


மாலையில் தொலை ஒளிபரப்பு மூலமாக பாடி மேம்பாலத்தினை திறந்து வைத்தேன். அதில் பேசும்போது, திமுக அரசை கவிழ்க்க நினைக்கும் சதிகாரர்களின் திட்டத்திற்கு பயப்படாமல் நமது பயணத்தை தொடர்வோம் என்று கூறினேன்.அறுவை சிகிச்சை முடிந்து ஒன்பது நாட்கள் ஆகிவிட்டது. முதுகு தண்டு கவசம் பொருத்தப்பட்டு, சக்கர நாற்காலியில் அமர்ந்து, அறை உள்ளேயே சிறிது நேரமும், பின்பு அந்த ஏழாவது தளத்தையும் சுற்றி வந்தேன். பார்வையாளர்களில் சிலரை நாற்காலியில் அமர்ந்தவாறே சந்தித்தேன்.காவல்துறை அதிகாரிகளை அழைத்து உயர் நீதிமன்றத்தில் அன்று என்ன நிலைமை என்று கேட்டேன். பதற்றம் நீடிப்பதாகவும், நீதிபதி உத்தரவின் பேரில் போலீசார் யாரும் அங்கே வரவில்லை என்றும், வழக்கறிஞர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, என் உருவப்படத்தையும் சிலர் எரித்தார்கள் என்றும், பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டார்கள் என்றும் விளக்கினார்கள்.


என் படத்தை எரிக்கிற அளவுக்கு நான் வழக்கறிஞர்களுக்கு என்ன வஞ்சனை செய்தேன் என்று யோசிப்பதிலேயே இரவு முழுதும் கழிந்தது. விடிந்து ஏடுகளில் வழக்கறிஞர்கள் என் படத்தை கொளுத்தியதாக வந்த செய்தி கண்டதும் வாழ்க வசவாளர்கள் என்று அண்ணா சொல்லும் பாணியில், வாழ்க வழக்கறிஞர்கள்என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன்.

நன்றி
நக்கீரன்


புலிகள் தாக்குதல் சுதந்திரக் கட்சியின் முகாம் மீது

0 comments


*photo file copy

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை பகுதியில் சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் முரளிதரன் குழுவின் சிங்கள சுதந்திரக் கட்சியின் மினி முகாம் மீது இன்று விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்மாந்துறையில் உள்ள சொறிக்கல்முனையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் ரி-56 ரக துப்பாக்கிகள் மூன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

நன்றி
நக்கீரன்


கமலின் புதிய படத்தில் ஸ்ருதி பாட்டு

0 comments

Photobucket
கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தின் தீம் பாடலை அவரது மகள் ஸ்ருதி கமல் பாடவுள்ளாராம்.

தந்தையின் படத்தில் ஸ்ருதி பாடுவது புதிதல்ல. ஏற்கனவே ஹேராம் படத்தில் அவர் குரல் கொடுத்துள்ளார். சமீபத்தில் வாரணம் ஆயிரம் படத்திலும் தனது குரல் முத்திரையைப் பதித்தார் ஸ்ருதி.

இந்த நிலையில், தலைவன் இருக்கின்றான் படத்தின் தீம் பாடலை ஸ்ருதி பாடவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, தலைவன் இருக்கின்றான் படத்தில் வரும் டிவி ரிப்போர்டர் கேரக்டரில் நடிக்குமாறு ஸ்ருதியை அவரது வட்டாரம் நெருக்கி வருகிறதாம். இந்த ரோலுக்கு இதுவரை எந்த நடிகையையும் போடவில்லை கமல். எனவே ஸ்ருதிக்கு நடிக்கும் வாய்ப்பும் இருக்கவே செய்கிறது.

நன்றி
-தட்ஸ்தமிழ்


தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி?

0 commentsதென்காசி அருகே மனித மாமிசம் சாப்பிடும் நபர்கள் நடமாடுவதாக பீதி கிளம்பியுள்ளது.

தென்காசி அருகேயுள்ள ஆய்க்குடியில் இருந்து சுரண்டைக்கு செல்லும் வழியில் கம்பிளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் யாரோ மர்ம மனிதன் இரவில் நடமாடுவதாகவும், அவன் மனிதர்களை கடித்து தின்பவன் எனவும் பொதுமக்கள் இடையே சில நாட்களாக பேசப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த வாரம் கம்பிளி பள்ளி வாசல் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து ஊருக்கு வடக்கே உள்ள சப்பாணி முத்து கோவில் அருகில் இரவில் சென்றுக் கொண்டிருந்தபோது 40 வயது மதிக்கத்தக்க மர்ம மனிதன் அவரது கையை பிடித்துக் கடிக்க முயன்றானாம். உடனே பேச்சிமுத்து அங்கிருந்து தப்பியோடி வந்துவிட்டார்.

அடுத்த நாள் பகலில் அதே இடத்தில் ஆய்க்குடியை சேர்ந்த கோழிக்கடை மாரிமுத்து மகன் மூர்த்தி என்பவரது கையை பிடித்து மர்ம மனிதன் கடிக்க முயற்சி செய்தானாம்.

இதுகுறித்து ஆய்க்குடி போலீசார் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் யாரும் பிடிபடவில்லை. வடமாநிலத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் இரவில் பிடித்து விசாரித்தனர். இதில் அவருக்கு தொடர்பு இல்லை என தெரிந்ததால் அவரை அனுப்பிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பேச்சிமுத்து கூறியதாவது, எனக்கு சொந்த ஊர் கம்பிளி. நான் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகின்றேன். ஒருநாள் நான் நெல் மூட்டைகளை ஏற்றுவதற்காக மல்லராமக்குளக்கரையில் சென்று கொண்டிருந்தேன்.

அப்போது இரவு 9 மணி இருக்கும். ஒரு ஆலமரம் அருகே சென்றபோது ஒரு மர்ம ஆசாமி திடீர் என்று வந்து எனது கையை பிடித்து கடிக்க முயன்றான். அவனிடம் நீ யார் என்று கேட்டேன். அவன் பதில் கூறவில்லை. மேலும் எனது கையை பிடித்து இழுத்தான். நான் அவனை குளத்துக்குள் தள்ளிவிட்டு ஓடிவந்துவிட்டேன்.

இப்போது அதை நினைத்தாலும் பயமாக இருக்கிறது. இந்த சம்பவம் நடந்த மறுநாளே ஆய்க்குடியை சேர்ந்த மூர்த்தி என்பவரையும் இதே போல் தாக்கி உள்ளான். எனவே போலீசாருக்கு தகவல் கொடுத்தோம்.

அவர்கள் வந்து தேடினர். ஆனால் அவன் சிக்கவில்லை. அவன் மனித மாமிசத்தை உன்பவனாக இருக்கலாம் என்றார்.

இந்த சம்பவம் ஆய்க்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சிலர் இது வெரும் வதந்தியாக இருக்கும் என்று கூறுகின்றனர். இருப்பினும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இரவில் தனியாக வெளியில் வர பயப்படுகின்றனர்.

நன்றி
-தட்ஸ்தமிழ்


புலிகளின் ரசாயான ஆயுத முகமூடி கண்டுபிடிப்பு-ராணுவம்

4 comments

- Photos file copy


விடுதலைப் புலிகள் மறைவிடத்திலிருந்து ரசாயான ஆயுதங்கள் தொடர்பான விஷ வாயு கசிவிலிருந்து தப்ப உதவும் முகமூடிகளை கண்டுபிடித்துள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் உடயார்கட்டுக்குளம் பகுதியில் இவற்றை கண்டுபிடித்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

பெருமளவிலான முகமூடிகள், வேதிகுண்டுகளின் தாக்கத்திலிருந்து தப்ப உதவும் உடைகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளதாம்.

இவற்றின் மூலம் பெருமளவில் ரசாயான ஆயுதங்களை ராணுவத்தினர் மீது பயன்படுத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுருக்கலாம் எனவும் இலங்கை ராணுவம் சொல்லியுள்ளது.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணுவத்தினர் மீது ரசாயன வாயுக்களையும் புலிகள் பயன்படுத்தி வருகின்றனராம். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த விளைவை அது தரவில்லையாம்.

இதுவரை 16 ரசாயான தடுப்பு உடைகளையும், 17 முகமூடிகளையும் பறிமுதல் செய்துள்ளதாக ராணுவம் கூறுகிறது.

இதற்கிடையே, அம்பலவன்பொக்கணை என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின் விமானத்தின் சிதைந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவம் கூறியுள்ளது.

நன்றி
-தட்ஸ்தமிழ்


சீமானை விடுதலை செய்யக் கோரி தம்பி உயர்நீதிமன்றத்தில் வாதம்

4 commentsதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள இயக்குநர் சீமானை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அவரது தம்பி ஜேம்ஸ் பீட்டர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சீமான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான இந்த நடவடிக்கையை ரத்து செய்து, சீமானை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தற்போது வக்கீல்கள் ஸ்டிரைக் நடந்து வருவதால் வக்கீல்கள் யாரும் பணிக்கு வராமல் உள்ளனர். இந்த நிலையில், சீமான் விடுதலை கோரும் மனு நேற்று நீதிபதிகள் தர்மாராவ், சுப்பையா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

வக்கீல்கள் ஸ்டிரைக் காரணமாக, சீமானின் தம்பி ஜேம்ஸ் பீட்டரே ஆஜராகி வாதாடினார்.

முன்னதாக ஜேம்ஸ் பீட்டர் தாக்கல் செய்திருந்த மனுவில்,

எனது சகோதரர் சீமான் கடந்த மாதம் 17-ந் தேதி பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நடந்த கூட்டத்தில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக பாளையங்கோட்டை போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்திய இறையாண்மைக்கும், தேசிய ஒற்றுமைக்கும் பாதகமாக பேசியதாக புதுச்சேரி போலீசாரும் கைது செய்தனர்.

கடந்த மாதம் 27-ந் தேதி சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் காவலில் வைக்க நெல்லை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். ஏற்கனவே சீமான் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டுமென்று போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டிருந்தார்.

இவ்வாறு உத்தரவிட்டபிறகு, தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டது தவறானதாகும். ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு அடிப்படையில் ஆராயும்போது சீமான் பேசிய பேச்சு சட்டவிரோத தடுப்பு சட்டத்தின்கீழ் வராது. விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காமலும், முழு பேச்சை ஆராயாமலும் உத்தரவிட்டிருப்பதால் அதை ரத்து செய்து சீமானை விடுதலை செய்யவேண்டும் என்று ஜேம்ஸ் பீட்டர் கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அடுத்த விசாரணையை 26ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

நன்றி
-தட்ஸ்தமிழ்


சென்னையில் போதை டிரைவிங்-1000 பேர் லைசென்ஸ் ரத்து

0 comments
குடித்து விட்டு வாகனம் ஓட்டிய 1000 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து காவல்துறை ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. சென்னை முழுவதும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களை கண்காணிக்கவும், ஏற்கனவே அமலில் உள்ளபடி ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து, உறுதியான நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தொடர்ச்சியாக குடிபோதையில் வாகனம் ஓட்டிய 11 ஆயிரம் பேரின் உரிமங்களை ரத்து செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டு ஆயிரம் பேரின் உரிமங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இப்படி ரத்தானவர்கள் பெரும்பாலும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அதி வேகமாகவும், குடிபோதையிலும் வாகனம் ஓட்டி வந்து சிக்கியவர்கள் ஆவர்.

இதுகுறித்து தென்சென்னை போக்குவரத்து துணை ஆணையர் மனோகரன் கூறுகையில்,

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் உரிமத்தை ரத்து செய்வது, என்பது நீண்ட கால செயல்பாடு. சம்பந்தப்பட்டவரின் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைக்கப்படும். அவர்கள் சம்பந்தப்பட்ட நபரிடம் அதுபற்றி விளக்கம் கேட்பர். அதன் பிறகு, பதில் திருப்தி அளிக்காத பட்சத்தில் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.

11 ஆயிரம் பேர்களுக்கு உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் 1000 பேரது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பேரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அது செயல்பாட்டில் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

நன்றி
-தட்ஸ்தமிழ்


முத்துக்குமார் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

0 comments
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இலங்கை ராணுவ அரசின் வெறி தனத்தை கண்டித்து வேலூர் நகரில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் பொதுக்கூட்டம் நடத்தினர்.

இந்த கூட்டத்தில் பழ.நெடுமாறன், மருத்துவர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன், சி.மகேந்திரன், பா.ஜ.க பொது செயலாளர் ராஜேந்திரன் உட்பட தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் இலங்கை அரசை கண்டித்தும், இலங்கையில் கொல்லப்படும் தமிழர்களை காப்பாற்றக்கோரி தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருந்தது.

அதன் படி வேலூரில் நடந்த கூட்டத்தில் முத்துக்குமாரின் தந்தை குமரேசனை வரவைத்து மேடையில் 3 இலட்ச ரூபாய் நிதியுதவியை மருத்துவர் ராமதாஸ், பழ.நெடுமாறன், வைகோ, திருமா ஆகியோர் வழங்கினர்.

அதன் படி வேலூரில் நடந்த கூட்டத்தில் முத்துக்குமாரின் தந்தை குமரேசனை வரவைத்து மேடையில் 3 இலட்ச ரூபாய் நிதியுதவியை மருத்துவர் ராமதாஸ், பழ.நெடுமாறன், வைகோ, திருமா ஆகியோர் வழங்கினர்.

நன்றி
நக்கீரன்


அதிரடி ராணுவம்: எதிரடி சர்தாரி:பாக்.பதட்டம்

0 commentsபாகிஸ்தானில் பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. பெனாசிர் கட்சி ஆட்சி அமைத்தபோது அதற்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சி ஆரவு தெரிவித்தது.


ஆனால் இடையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நவாஸ்ஷெரீப் ஆதரவை விலக்கி கொண்டார்.

அதன் பிறகு சர்தாரிக்கும், நவாஸ் ஷெரிப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. நவாஸ்ஷெரீப் மீது சர்தாரி பழி வாங்கும் நடவடிக்கைகளை தொடங்கினார்.

இந்த நிலையில் நவாஸ் ஷெரீப் அவரது தம்பியும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தடைவிதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.அவரது தம்பி பஞ்சாப் மாகாணத்தில் முதல்-மந்திரியாக இருந்தார். அவரது வெற்றியும் செல்லாது என்று தீர்ப்பில் கூறப்பட்டது. இதனால் பஞ்சாப் மாகாண அரசை அதிபர் சர்தாரி டிஸ்மிஸ் செய்தார்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு அதிபர் சர்தாரிதான் காரணம் என்று நவாஸ்ஷெரீப் குற்றஞ்சாட்டியுள்ளார்.முன்பு நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது ராணுவ புரட்சி மூலம் முஷரப் ஆட்சியை கைப்பற்றினார். அப்போது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்பட பலரை நீக்கி விட்டு புதிய நீதிபதிகளை நியமித்தார்.


அவர்கள்தான் இந்த ஆட்சியிலும் நீடித்து வந்தனர். அவர்களை நீக்கி விட்டு முன்பு இருந்த நீதிபதிகளையே நியமிக்க வேண்டும் என்று ஏற்கனவே நவாஸ் ஷெரீப் வற்புறுத்தி வந்தார்.


ஆனால் இதை சர்தாரி ஏற்கவில்லை. எனவே சர்தாரி தூண்டி விட்டுதான் இந்த நீதிபதிகள் அவருக்கு எதிராக தீர்ப்பு கூறியதாக குற்றஞ்சாட்டினார்.

சர்தாரியின் போக்கை கண்டித்தும், பழைய நீதிபதிகளையே மீண்டும் நியமிக்க வற்புறுத்தியும் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு பேரணி நடத்த போவதாக நவாஸ்ஷெரீப் அறிவித்தார்.

பேரணியை இன்று கராச்சியில் தொடங்கி 16-ந்தேதி இஸ்லாமாபாத்தில் முடிவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. அங்கு பாராளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்து இருந்தனர். இந்த போராட்டத்துக்கு வக்கீல்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதனால் பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் பதட்ட நிலை உருவானது. எனவே நிலைமையை 16-ந்தேதிக்குள் சீர் செய்யும்படி ராணுவ தளபதி ஹியானி சர்தாரியை சந்தித்து எச்சரித்தார். இல்லை என்றால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டியுள்ளார். எனவே தளபதி ஹியானி ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அதிபர் சர்தாரி ஈரானில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக டெக்ரான் சென்றார். நவாஸ்ஷெரீப் போராட்டம் முடியும்வரை அவர் நாடு திரும்பமாட்டார். ஈரானில் இருந்து துபாய் சென்று அங்கு தங்கி இருக்க போகிறார் என்று கூறப்பட்டது.

சர்தாரியை நாடு திரும்ப கூடாது என்று ராணுவ தளபதி தடை விதித்து இருப்பதாக இன்னொரு தகவல் தெரிவித்தது. இதனால் பாகிஸ்தானில் உச்சகட்ட அரசியல் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டது.

நவாஸ்ஷெரீப் பேரணியின் தொடக்கமாக நேற்று அபோதாபாத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது சர்தாரி அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். இன்று பேரணி தொடங்குவதை அடுத்து நேற்று இரவோடு இரவாக எதிர்கட்சி தலைவர்கள் பலரை கைது செய்தனர். நவாஸ்ஷெரீப் கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.நவாஸ் ஷெரீப்பையும் வீட்டுக் காவலில் வைத்து இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. அரசியல் கட்சி நடத்தும் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானை கைது செய்ய போலீசார் சென்றனர். அவர் தலைமறைவாகிவிட்டார்.

இதனால் நிலைமை இன்னும் மோசமானது. நாடு திரும்பமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட அதிபர் சர்தாரி நேற்று இரவோடு இரவாக இஸ்லாமாபாத் திரும்பினார்.

அவர் உடனடியாக பிரதமர் கிலானியை அழைத்து தற்போதைய நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார். முஷரப் ஆதரவு கட்சியான முஸ்லிம்லீக் (கியூ) தலைவர்களையும் அழைத்து பேசினார்.

நிலைமை மோசமாகி வருவதால் தளபதி ஹியானி ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றலாம் என்று சர்தாரி எதிர்பார்க்கிறார்.

இதற்கு இடம் கொடுக்காமல் நவாஸ் ஷெரீப்புடன் சமரசமாக சென்றுவிடவும் அவர் முயற்சித்து வருகிறார். பஞ்சாபில் கவர்னர் ஆட்சியை வாபஸ் பெற்று மறுபடியும் நவாஸ் ஷெரீப் தம்பி ஆட்சி அமைக்க உதவவும் அவர் தயாராக இருக்கிறார்.

இதை பிரதமர் கிலானி வெளிப்படையாகவே அறிவித்து உள்ளார். பஞ்சாபில் கவர்னர் ஆட்சி நீண்ட நாள் இருக்காது. யாருக்கு மெஜாரிட்டி இருக்கிறதோ அவர்கள் ஆட்சி அமைக்கலாம் என்று கூறினார். இதன் மூலம் நவாஸ்ஷெரீப்பை சமாதானப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்க்ள.

ஆனால் நவாஸ்ஷெரீப் திட்டமிட்டப்படி பேரணியை நடத்துவதிலேயே குறியாக இருக்கிறார். பேரணி இஸ்லாமாபாத் வரும்போது அங்கு பெரும் கொந்தளிப்பு ஏற்படலாம்.

இதை பயன்படுத்தி தளபதி ஹியானி ராணுவ புரட்சியை ஏற்படுத்திவிடுவார் என்றே பாகிஸ்தான் மக்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.

நன்றி
நக்கீரன்


இலங்கைத் தமிழர் வாழ்வில் பள்ளம் ஏற்படாமலிருக்க, என் உள்ளம் தாங்கித்தானே ஆக வேண்டும்:கலைஞரின் டைரி குறிப்புகள்

4 comments


ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்வர் கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட சிசிச்சைகள், அனுபவங்களை முதல்வர் தொடர்ந்து எழுதி வருகிறார்.


அவர் வெளியிட்ட மருத்துவமனை டைரி குறிப்புகள்:


6-2-2009: மாயவரம் காந்தி என் இளமைக் கால நண்பர். கழகத் தோழர். அவர் இப்போது இல்லை. காந்திக்கு சம்பத், கருணாநிதி என்று இரண்டு புதல்வர்கள்.


சம்பத் இப்போது பால் வளத் துறை அமைச்சரின் உதவியாளர். அவர் மகளுக்கு என் இல்லத்தில் இன்று திருமணம் செய்து வைப்பதாக ஒப்புக் கொண்டிருந்தேன். மணமக்களுடன் மருத்துவமனைக்கே வந்து திருமணத்தை நடத்தி வைக்கக் கேட்டுக் கொண்டார். படுக்கையில் இருந்தவாறே நடத்தி வைத்தேன்.


என் துணைவியர் தயாளு, ராஜாத்தி ஆகியோரும், மகள்களும் செவிலியர்களாக இருந்து கவனித்துக் கொண்டார்கள். செல்வி பெங்களூரையே மறந்து விட்டு இரவு முழுவதும் தூங்காமல் மருத்துவமனையிலேயே தங்கி என் கோபத்தையெல்லாம் தாங்கிக் கொண்டது.


கனி நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் எனக்குத் துணையாக இருந்தது. என் மருமகள்கள் பகல் நேரங்களில் மருத்துவமனை வந்து மாமியாருக்கு உதவியாய் இருந்தனர். மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின், மு.க. தமிழரசு ஆகியோரும் மருத்துவமனையிலே தங்கியிருந்தனர்.


முதுகுத் தண்டில் ஊசி போடுவதற்காக இடையில் நிறுத்தப்பட்டிருந்த மாத்திரையை மீண்டும் கொடுக்கத் தொடங்கினார்கள். மதியம் 2 மணி அளவில் கடுமையான வலி. பொறுத்துக்கொள்ள இயலவில்லை. மீண்டும் ஒரு முறை எம்.ஆர்.ஐ. எம்.ஆர்.ஐ. எடுக்கப்பட்டது.


எல்.2 எல்.3 இடையே விலகியிருந்த டிஸ்கின் நீளம் மேலும் அதிகமாகியிருந்தது. அதுதான் வலி அதிகமானதற்குக் காரணம் என்று மருத்துவர்கள் விளக்கினர். அதனை குணம் ஆக்குவதற்கு முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை ஒன்றுதான் வழி என்றார் டாக்டர் மார்த்தாண்டம். டாக்டர் மோகன்தாசை அழைத்து கேட்டபோது, அவரும் அதையே சொன்னார்.


குடும்பத்தாரை அழைத்து என் வயதை எண்ணிடும்போது இந்த அறுவை சிகிச்சை மிகவும் அபாயகரமானது. ஆனால் வலியைப் போக்க வேறு வழியில்லை என்று மருத்துவர்கள் கூறினர். குடும்பத்தார் இந்த விஷயங்களையெல்லாம் என்னிடம் சொல்லாமல், அறுவை சிகிச்சை மிகவும் சாதாரணமானது; பயப்படுவதற்கு ஒன்றுமில்லை; செய்து கொள்ளலாம் என்று என்னை சமாதானப்படுத்தினர்.


குறிப்பாக கலாநிதி மாறன் ‘இதிலே பயப்படுவதற்கு ஒன்றுமில்லை தாத்தா; செய்து கொள்ளலாம்’ என்று அவருடைய தந்தையைப் போலவே கூறினார். அவர்களின் வாய்கள்தான் எனக்கு சமாதானம் கூறின. என்றாலும் அத்தனை பேருடைய முகங்களையும் ஒரு முறை பார்த்தவுடனேயே உண்மையைப் புரிந்து கொண்டேன்.


நான் ஏதாவது விசாரித்தால், ஒவ்வொருவருடைய விழிகளிலிருந்து விழ கண்ணீர் காத்திருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. சாதாரண அறுவை சிகிச்சைதானே, ஏன் பயப்படுகிறீர்கள் என்று நானே அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, ‘அறுவை சிகிச்சைக்குத் தயார். எப்போது வைத்துக் கொள்ளலாம்?’ என்றும் கேட்டேன்.


நரம்பியல் டாக்டர் ஏ.வி. சீனிவாசன், டெலி-மெடிசின் மூலமாக அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டு அறுவை சிகிச்சை பற்றிய விவரங்களை அறிந்தார். இறுதியாக, டெல்லியிலே உள்ள டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வாலை வரவழைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.


தயாநிதி மாறன் உடனடியாக, மத்திய அமைச்சர் அன்புமணியிடம் தொடர்பு கொண்டு, டாக்டர் ஜெய்ஸ்வாலை சென்னைக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டார். அடுத்த நாளே டாக்டர் ஜெய்ஸ்வாலை சென்னைக்கு அனுப்பி வைப்பதாக அன்புமணி தகவல் அனுப்பினார்.


7-2-2009: அன்று மாலை டெல்லியிலிருந்து டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் ராமச்சந்திரா மருத்துவமனை வந்தார். அவரும் டாக்டர் மார்த்தாண்டமும் வலி எதுவரை பரவியுள்ளது என்று கேட்டனர். இது தை மாதம் அல்லவா, எனவே என் தை (தொடை) வரை நீடிக்கிறது என்று சிரித்துக் கொண்டே கூறினேன்.


டாக்டர் மார்த்தாண்டம் தலைமையில் டாக்டர் தணிகாசலம் (இருதய நிபுணர்), டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் (முதுகெலும்பு நிபுணர்), டாக்டர் கோபால் (குடும்ப டாக்டர்), டாக்டர் கார்த்திக் கைலாஷ் (முதுகெலும்பு நிபுணர்), டாக்டர் ஏ.எஸ். நாயுடு (மயக்க மருந்து நிபுணர்), டாக்டர் மகேஷ் வகாமுடி (மயக்க மருந்து நிபுணர்), டாக்டர் ஏ.வி. சீனிவாசன் (நரம்பியல் நிபுணர்), டாக்டர் கே.ஆர். பழனிசாமி (குடல் மற்றும் இரைப்பை நோய் நிபுணர்), டாக்டர் ராஜ் பி. சிங் (நுரையீரல் நிபுணர்), டாக்டர் மயில்வாகனன் (எலும்பு சிகிச்சை நிபுணர்), டாக்டர் சண்முகம் (மயக்க மருந்து நிபுணர்), டாக்டர் பாஸ்கர் (மயக்க மருந்து நிபுணர்), டாக்டர் சவுந்தரராசன் (சிறுநீரகவியல் நிபுணர்) ஆகிய 14 பேரைக் கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது.


அறுவை சிகிச்சையை ராமச்சந்திரா மருத்துவமனையிலே 11ம் தேதி செய்யலாம் என்றும், ஜெய்ஸ்வால் 10ம் தேதியே சென்னை வந்துவிட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.


மத்திய உள் துறை அமைச்சர் ப. சிதம்பரம் மருத்துவமனைக்கு இன்று வந்திருந்தார். சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஏற்கனவே என்னிடம் தேதி பெற்றிருந்தார். மருத்துவமனையில் இருந்தவாறே வீடியோ கான்பரன்ஸ் மூலம் நான் அடிக்கல் நாட்டவேண்டு மென்று கூறினார். நானும் ஒப்புதல் அளித்தேன்.


8-2-2009 : இலங்கைப் பிரச்சினையிலே மட்டுமாவது ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று எழுதியிருந்தேன். அந்த வேண்டுகோளை அலட்சியப்படுத்தியதோடு, என்னை சிலர் மிகவும் இழிவுபடுத்தி பேசியும், எழுதியும் இருப்பதை காலை ஏடுகளில் காண நேர்ந்தது. அவர்கள் தூற்றியிருப்பதை என் உடல் தாங்குகிறதோ இல்லையோ இலங்கைத் தமிழர் வாழ்வில் பள்ளம் ஏற்படாமலிருக்க, என் உள்ளம் தாங்கித் தானே ஆக வேண்டுமென்று எழுதினேன்.


ஜெயலலிதா விடுத்த நீண்ட அறிக்கையில் விவசாயிகளுக்காக கழக ஆட்சியில் குறிப்பாக நான் எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். ஜெயலலிதாவின் அறிக்கைக்கு விரிவாக பதில் எழுதி, ஏடுகளுக்கெல்லாம் அனுப்பச் செய்தேன்.


இதற்கிடையே, ஜெய்ஸ்வால் அறிவுரைப்படி, நரம்பின் செயல் திறனைக் கண்டறிவதற்கான சோதனை யை நரம்பியல் நிபுணர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் இன்று மேற்கொண்டார். இதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேலானது.


தஞ்சை சுல்தான் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்தி, என் கைப்பட இரங்கல் செய்தி எழுதிக் கொடுத்தேன்.


மத்திய அமைச்சர் அன்புமணி வந்து உடல் நலம் விசாரித்தார்.


9-2-2009: தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு இதயத் துடிப்பு எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக ஒரு இயந்திரத்தை என் உடலிலேயே பொருத்திவிட்டார்கள். அது மறுநாள்தான் அகற்றப்பட்டது. இதயத் துடிப்பு சீராக இருக்க மாத்திரை தரப்பட்டது.


நிதித் துறை செயலாளரையும் அதிகாரிகளையும் மருத்துவமனைக்கு அழைத்து நிதிநிலை அறிக்கை தயாரிப்பது குறித்து அன்று விவாதித்தேன். காலை 10.45 மணிக்கு தொடங்கிய கூட்டம், நண்பகலைத் தாண்டியும் நீண்டது. டாக்டர்கள் வந்து பரிசோ தனைகளைச் செய்யவும் மாத்திரைகள் சாப்பிடவும் நேரமாகி விட்டது என்பதை நினைவூட்டினர்.


நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மாலையிலும் தொடர்ந்தது. முக்கிய கோப்புகளை வரவழைத்து கையெழுத்திட்டேன்.


10-2-2009: காலை ஏடுகளை படித்தேன். ஆட்சியை விட்டே விலகினால்தான் இலங்கை பிரச்னையில் யன் ஏற்படும் என்று என்மீது மிகுந்த அக்கறையோடு வழக்கம்போல் ஒரு தலைவர் அறிக்கை விட்டிருந்தார். அதே தலைவர், தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தபோது இல்ங்கை தமிழருக்காக எதையும் செய்யவில்லை என்றும் எழுதியிருந்தார். ஆளுங்கட்சியாக இருந்தபோது தி.மு.க. செய்தது பற்றிய பட்டியலை ஏடுகளுக்கு அனுப்பச் செய்தேன்.


மலையில், சோனியா காந்தி தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார். விரைவில் நலம் பெற வாழ்த்தினார்.


மாலையில் மயக்க மருந்து நிபுணர், டாக்டர் மகேஷ் வகாமுடி தலைமையில் மருத்துவ குழுவினர் என்னைப் பரிசோதனை செய்தனர். கிருமி தொற்று வராமல் இருப்பதற்காக அன்று மாலையிலிருந்தே நரம்பு மூலம் செலுத்தப்படும் ஊசி மருந்து ஆரம்பிக்கப்பட்டது. மறுநாள் அறுவை சிகிச்சை என்பதால், வீட்டாரும், மருத்துவர்களும் கூட முகமூடி அணிந்த பிறகே என் அருகே வர அனுமதிக்கப்பட்டனர்.


விடிந்தால் அறுவை சிகிச்சை என்பதால் மதுரையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த நிலையிலும் என் மகன் அழகிரி சென்னை வந்து மருத்துவமனையிலேயே தங்கினார். ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எல்லாம் அங்கேயே தங்கிவிட்டனர்


நன்றி
நக்கீரன்


வீட்டுக் காவலில் நவாஸ் ஷெரீப்-இம்ரான் கான்

0 comments
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப், அவரது சகோதரர் ஷாபாஸ் ஷெரீப், மற்றும் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் ஆகியோரை வீட்டுக் காவலில் வைக்க போலீசாருக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் உச்சநீதிமன்ற சமீபத்தில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரர் ஷாபஸ் ஷெரீப் ஆகியோர் தேர்தலில் போட்டியிட தடை விதித்தது.

தங்கள் மீது தடைவிதிக்கப்பட்டதன் பின்னணியில் அதிபர் சர்தாரி இருப்பதாக குற்றம்சாட்டிய ஷெரீப் சகோதரர்கள் தங்களது கட்சியின் சார்பில் பெரும் போராட்டத்தை அறிவித்தனர்.

இந்நிலையில் சர்தாரி அரசு இந்த போராட்டத்தை தடுக்கவில்லை என்றால் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி கொண்டு வரப்படும் என முன்னாள் அதிபர் முஷராபால் நியமிக்கப்பட்ட தற்போதைய ராணுவ தளபதி கியானி, மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து இஸ்லாமாபாத்தில் நடக்கவிருக்கும் போராட்டத்தை தடுக்கும் விதமாக, பாகிஸ்தான் அரசு நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரரை வீட்டுகாவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் இம்ரான் கான், ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் குவாசி ஹூசைன் அகமது ஆகியோரையும் வீட்டு காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

தளபதிகளுடன் சர்தாரி ஆலோசனை:

இந் நிலையில் பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி பர்வேஸ் கியானி, ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கலாம், ராணுவப் புரட்சி வெடிக்கலாம் என்ற சூழ்நிலை வலுத்து வரும் நிலையில், பாகிஸ்தானின் முப்படைத் தளபதிகளையும் அழைத்து அதிபர் ஆசிப் அலி சர்தாரி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

தூதரக பாதுகாப்புக்கு இந்திய கமாண்டோக்கள்:

இதற்கிடையே, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துணைத் தூதரகத்தின் பாதுகாப்புக்கு தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ராணுவப் புரட்சி வெடித்தால் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பாதுகாப்பு தரும் பணியை இவர்கள் மேற்கொள்வார்கள்.

நன்றி
-தட்ஸ்தமிழ்