Headline

வன்னியில் உணவுப்பஞ்சம்: பட்டினியில் சிறுவர்கள் பலி மக்கள் அவதி

0 comments

வன்னியில் சிங்கள ராணுவத்தினர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் போரினாலும், உலகத் தொண்டு நிறுவனங்களின் உதவிகள் எதுவும் கிடைக்காத காரணத்தினாலும் ஏற்பட்டுள்ள பட்டினி அவலத்தினால் கடந்த 4 நாட்களில் 10 சிறுவர்கள் உட்பட 18 தமிழர்கள் வன்னியில் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ச்சியான உணவின்மை காரணமாகவும் நீரிழப்பு காரணமாகவும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் - நோய் எதிர்ப்புத் தன்மையை இழந்து விட்டதனாலும் - இவர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பல நாட்கள் உணவின்மை காரணமாகவே மயக்கமடைந்த 5 தமிழர்கள் மாத்தளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றன.

மேலும், உணவு மற்றும் மருத்துவ வசதி இல்லாத இதே நிலை தொடர்ந்தால் பட்டினி மற்றும் நோய் காரணமாக இன்னும் சில வாரங்களில் இழப்புக்கள் நூற்றுக்கணக்கில் அமையக்கூடும் எனவும் மருத்துவ தரப்பினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிங்கள ராணுவத்தின் தொடர்ச்சியான வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களினால் வளம் கொழிக்கும் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு வந்த காய்கறிகளை பறிக்க முடியாத நிலையும் மரக்கறி வகைகளை பயிரிட முடியாத நிலை தோன்றியிருப்பதனாலும் மரக்கறி வகைகளுக்கு தட்டுப்பாடு வன்னியில் ஏற்பட்டுள்ளது.


அத்துடன், 95 விழுக்காடு மக்கள் ஒரு நேர கஞ்சியை மாத்திரமே உண்டு வருகின்ற நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக, சிறுவர்களுக்கு ஊட்ட உணவு என்பது முற்று முழுதாக இல்லாத நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேநீர் குடிப்பதற்கு கூட தேயிலை சீனி எதுவும் இல்லாது அவலம் காணப்படுவதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி
நக்கீரன்


ஈழப்பிரச்சனை:தமிழ்நாடு பிராமணர் சங்கம் கோரிக்கை

2 commentsதமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் பழனி கிளை கூட்டம் அடிவாரம் அருள்ஜோதி வீதியில் உள்ள எம்.என்.ஆர். திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் என்.ஹரி ஹரமுத்து தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில தலைவர் என்.நாராயணன் விடுத்துள்ள கோரிக்கை நகல் வாசிக்கப்பட்டு தீர்மானம் நிறை வேற்றபபட்டது.


தீர்மானத்தில், மத்திய அரசு இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்களை காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுக்கு உறதியான முறையில் வலியுறுத்தும் வகையில் இந்தியாவின் அதிருப்தியினையும், கண்டனத்தினையும்தெரிவித்து நிலைமைகளை உணர்த்திட வேண்டும்.மனித நேயமற்ற முறையில் அப்பாவி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவது, வீடு, வாசல், உடைமைகளை இழந்து அகதிகள் ஆவதும், நம் தமிழ் சகோதரிகளின் கவுரவமும்,மானமும் பாதிக்கப்படாமல் இருந்திடவும், உடனடி அனைத்து நடவடிக்கை களையும் எடுத்திட வேண்டும்.


அப்பாவி தமிழர்களுக்கு உணவு பொருட்களும், மருந்துகளும் ஏனைய தேவையான பொருட்களும் உடனடி அனுப்பி வைக்கப்பட வேண்டும். இரண்டு பக்கத்திலிருந்தும் போர் நிறுத்தம் நிறுத்தம் செயல்பட உடனே மத்திய அரசு முனைப்புடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.


நாம் தேச பக்தர்கள், நமது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான எந்த சிந்தனை யினையும் சொல்லினையும், செயலினையும் ஆதரிக்க மாட்டோம்.


அதே சமயம் இலங்கை தமிழர் பிரச்சினை என்றாலே தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை மனதில் வைத்துக் கொண்டு மட்டுமே கையாளுவது முறையாகாது.


நமது தமிழ் சகோதர, சகோதரிகள் அல்லல் படுவதை, அகதிகளாகப்படுவதினை இனியும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்கின்ற நமது நிலைபாட்டினை தெள்ளத் தெளிவாக்கிடுவோம்.


இலங்கை தமிழர் நலனுக்காக நமது நாட்டின் இறையாண்மையினை பாதிக்காத வகையில் எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் நடவடிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் தமிழக மெங்கும் பிராமணர் சங்கம் ஆதரவு தரும்.


என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

நன்றி
நக்கீரன்


போர்க்களத்தில் பொட்டுஅம்மன்:புலிகளை வழிநடத்தும் பொறுப்பு!

2 commentsமுல்லைத்தீவில் உள்ள புதுக்குடியிருப்பு நகரையொட்டியுள்ள பகுதிகளில் இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது.


தற்போது, இந்த போரில் புலிகள் இயக்க புலனாய்வு பிரிவின் பொறுப்பாளரும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வலது கரமாக கருதப்படுபவருமான பொட்டு அம்மன் குதித்து இருக்கிறார்.


நேற்று முன்தினம் இரவு முதல் சிங்கள ராணுவத்தின் 58-வது படைப்பிரிவினருக்கு எதிரான போரை அவர் வழிநடத்த ஆரம்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


விடுதலைப்புலிகளின் தொலைத்தொடர்புகளை ஒட்டுக்கேட்டதன் மூலம் இந்த தகவல் உறுதிபடுத்தப்பட்டு உள்ளதாக இலங்கை பாதுகாப்பு படை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கி நேற்று காலை வரையில் நடந்த மோதல்களின்போது விடுதலைப்புலிகளை பொட்டு அம்மன் வழி நடத்தி இருக்கிறார் என்றும் ராணுவம் தெரிவித்து இருக்கிறது.


3 நாட்களுக்கு முன்பு, 58-வது படைப்பிரிவினர் பெரும் உயிர்ச்சேதங்களை சந்தித்திருந்ததும், ஆயிரத்துக்கும் மேலான ராணுவத்தினர் இறந்தும், 3 ஆயிரம் பேர் வரை காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.


நன்றி
நக்கீரன்


நடிகை த்ரிஷாவின் தொந்தரவு: ஓட்டல் ஊழியர்கள் கண்டிப்பு

2 comments

Photobucket
நடிகை த்ரிஷா தெலுங்கு படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்று இருந்தார். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.

அவர் ரூமுக்குள் இருந்து டெலிவிஷன் சத்தமும் ஓ வென ஊளையிடும் சத்தமும் தொடர்ந்து கேட்பதாகவும் இது தங்களுக்கு தொந்தரவாக இருப்பதாகவும் பக்கத்து அறைகளில் வசித்தவர்கள் ஓட்டல் ஊழியர்களிடம் புகார் செய்தனர்.


இதனால் ஊழியர்கள் த்ரிஷாவை கண்டித்ததாக தகவல் வெளியானது.


இதுபற்றி த்ரிஷா,


’’நான் டெலிவிஷனில் ஆஸ்கார் விருது விழாவை பார்த்துக்கொண்டு இருந்தேன். ஏ.ஆர். ரகுமான் விருது வாங்கியதும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தேன்.


அப்போது ஓட்டல் ஊழியர்கள் கதவை தட்டினார்கள். பக்கத்து அறையில் இருப்பவர்களுக்கு தொல்லையாக இருப்பதால் டி.வி. சவுண்டை குறைக்கும் படி கூறினார்கள்’’ என்றார்.


கலைஞரிடம் நேரில் நலம் விசாரித்த ராமதாஸ்

2 comments
தமிழக முதல்வர் கருணாநிதி முதுகு வலி காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

நன்றி
நக்கீரன்


ஆஸ்கரை விட உயர்ந்தவர் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்

0 comments
இளையராஜாவின் இசைக்கு முன்பு ஆஸ்கர் விருது மிகச் சாதாரணமானது. சர்வதேச எல்லைகளைக் கடந்தவர் இளையராஜா. ஆஸ்கர் விருதை விட உயர்ந்தது இளையராஜாவின் இசை என்று இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று தாயகம் திரும்பியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இன்று பிற்பகல் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்த இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட செய்தியாளர்ககள், புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராபர்கள் என குவிந்து விட்டனர். ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனங்கள் ரஹ்மானின் பேட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்தன.


பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஹ்மான். அப்போது இசைஞானி இளையராஜாவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.

இளையராஜா குறித்து ரஹ்மான் கூறுகையில், இளையராஜாவுக்கு முன்பு இந்த ஆஸ்கர் விருதுகள் சாதாரணமானவை. இளையராஜாவின் இசை சர்வதேச எல்லைகளைக் கடந்தது.

சரியான முறையி்ல் அவரது இசை எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் எப்போதோ அவர் ஆஸ்கர் விருதினை வென்றிருப்பார் என்று புகழாரம் சூட்டினார்.

இந்தியப் படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த ரஹ்மான், ஆஸ்கர் தரத்திற்கு ஏற்றபடி படம் எடுத்தால் நிச்சயம் நமது படங்களுக்கும விருது கிடைக்கும் என்றார்.

பேட்டியின் நிறைவில், செய்தியாளர்கள் வேண்டுகோளுக்கிணங்க ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாடலின் சில வரிகளைப் பாடினார் ரஹ்மான்.

நன்றி
- தட்ஸ்தமிழ்


தமிழர்கள் போர் நிறுத்த போராட்டம்:மீனவர்கள் மீது ராணுவம் ஆத்திரம்?

0 commentsராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 640 விசைப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இவைகள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிங்கள கடற் படையினர் 7 அதிநவீன படகில் வந்து சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டு மீனவர்களை தாக்கினர்.

இதில் சூசை அந்தோணி ,முத்து லிங்கம், அருள்தாஸ் உள்பட 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகாயம் அடைந்து தனியார், அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று சென்றனர்.

இதில் ராஜா என்பவர்ராம நாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இலங்கை கடற்படை தாக்கு தலில் டீசல், பல லட்சம் ரூபாய் மீன்பிடி சாதனங்கள் சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடையே பெரும்பதட்டத்தை உருவாக்கி உள்ளது.

இதற்கு மீனவ சங்கம்,

''தமிழ்நாட்டில் இலங்கையில் தமிழர் பாதுகாக்கப்படவேண்டும், போர்நிறுத்தம் செய்ய பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகிறது. இதனால் ஆத்திரம் மடைந்த ராணுவத்தினர் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களை தாக்கி வருகின்றனர்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவும், தமிழர்கள் பாது காக்கப்பட வேண்டும் என்பதிலும் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை.

போராட்டம் என்ற பெயரில் சிங்களஅரசையும்,ராணுவத்தையும் எதிர்த்து குரல் கொடுப்பதைதொலைக்காட்சி மூலம் பார்ப்பதால் அதன் எதிரொலியாக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.

நன்றி
நக்கீரன்


இனி லோக்கல் 33 பைசா-எஸ்டிடி 50 பைசா!: பிஎஸ்என்எல் அதிரடி

3 commentsபிஎஸ்என்எல் செல்போன் மற்றும் லேண்ட் லைன் கட்டணங்கள் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன.

வரும் மார்ச் 1ம் தேதி முதல் பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் மற்றும் வில் போன்களின் கட்டணத்தை நிமிடத்துக்கு 33 காசாகவும், எஸ்.டி.டி. கட்டணத்தை நிமிடத்துக்கு 50 காசாகவும் குறைக்கவிருப்பதாக, தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

'இந்தியா கோல்டன் 50' என்ற புதிய திட்டம் மூலம் பிரீ பெய்டு மொபைல் சந்தாரர்களுக்கு எஸ்.டி.டி. கட்டணம் 50 காசுகளாக குறைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இதன்படி மார்ச் 1ம் தேதி முதல் நாட்டின் எந்த பகுதிக்கும் 50 காசில் செல்போனில் பேசலாம்.

இதற்கான இணைப்பு பெற, சேவை வரி உள்பட ஆரம்ப கட்டணமாக ரூ.375 செலுத்த வேண்டும். இதில் பேசுவற்கான மதிப்பு ரூ.30 தரப்படும், பயன்பாட்டிற்கான கால அளவு 30 நாட்கள்.

60 வினடிக்கு ஒரு யுனிட் என கணக்கிடப்படும். உள்ளூர், எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்துக்கு 50 காசு. வெளிநாடுகளுக்கு (ஐ.எஸ்.டி.) அமெரிக்கா, கனடா, பிரிட்டன், இலங்கை நாடுகளுக்கு ரூ.7.20ம், நேபாளம், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, பாகிஸ்தானுக்கு ரூ.9ம்,

ஐரோப்பா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஆங்காங், குவைத், பஹ்வான் ஐக்கிய அரபு நாடுகளுக்கு ரூ.9.60 கட்டணம் வசூலிக்கப்படும். உலகின் இதர பகுதிகளுக்கு கட்டணம் ரூ.12.

இனி '95' வேண்டாம்!:

இதற்கிடையே 95 என்ற எண்ணை உபயோகித்து எஸ்.டி.டி. பேசும் வசதி நாளை (28ம் தேதி) முதல் ரத்து செய்யப்படுவதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த வசதியை வைத்துள்ள சந்தாதாரர்கள் இனிமேல் எஸ்.டி.டி. பேசுவதற்கு 0 என்ற எண்ணை உபயோகிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

நன்றி
- தட்ஸ்தமிழ்


பிரபாகரன் படத்தை பார்த்து பயப்படும் காங்கிரசார்: மணிவன்னண்

0 comments
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது வடகாடு கிராமம். வடகாடு கிராமத்தில் தமிழின உணர்வாளர்கள் சார்பில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு பொதுக்கூட்டம் 26ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு அப்பகுதியின் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விசை ஆனந்த் தலைமை தாங்கினார். (இது புதுக்கோட்டை காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் புஷ்பராஜின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.)

இந்தக் கூட்டத்தில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவன்னண், திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, ஓவியர் புகழேந்தி ஆகியோர் சிறைப்புரை ஆற்றினார்கள்.

மணிவன்னண் பேசும்போது, பிரபாகரன் படத்தைப் பார்த்து காங்கிரஸ் கட்சிக் காரர்கள் கோபம் அடைகிறார்கள். பிரபாகரன் படத்தை பார்க்கவே பயப்படுகிறார்கள். அத்வானி, வாஜ்பாய் போன்றவர்களின் படங்கள் சமீபத்தில்தான் தமிழ் நாட்டுக்குள் வந்தது. அதை எல்லாம் ஏற்றுக்கொண்டவர்கள் ஏன் பிரபாகரன் படத்தைப் பார்த்து பயப்படுகிறார்கள்.

பிரபாகரன் படத்தை செய்தித்தாள்களில் போடுகிறார்கள். ஆனால் சட்டையில் குத்திக்கொண்டால் கைது செய்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பிரபாகரனின் படங்களை எடுக்க காங்கிரஸ் கட்சியினர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

இந்தப் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் தங்களின் தலைவர்கள் படங்களை வைத்தால், இந்தக் கூட்டத்தினர் சும்மா விடுவார்களா? வரும் தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வரக்கூடாது என்பதே நமது நோக்கம்.

படத்தில் நடிக்கிற மணிவன்னண், வடிவேலுவை விட காமெடிகாரர்களாக இருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். ஈழத்தை உடைத்து அதில் ஆட்சி செய்வது நமது நோக்கம் அல்ல. அமைதி நிலவ வேண்டும் என்பதே நமது நோக்கம்.

கடந்த 15 வருடங்களாக பிரபாகரன் இறந்துவிட்டார், இறந்துவிட்டார் என செய்திகளை பரப்பி வருகின்றனர். கடந்த 15 வருடமாக ஒரு நபர் தொடர்ந்து இறந்து கொண்டிருக்கிறார் என்றால் அது பிரபாகரன் மட்டும்தான்.

தமிழினத்துக்கு துரோகம் செய்யும் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டோம். தமிழகத்தை விட்டே துரத்துவோம் என்றார்.

நன்றி
நக்கீரன்


ஈழத்தமிழருர்களுக்கான ஆதரவு கூட்டத்தில் 20 பேர் தீக்குளிக்க முயற்சி

0 comments
புதுக்கோட்டை அருகே தமிழின உணர்வாளர்கள் நடத்திய ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு கூட்டத்தில் 20 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகாடு கிராமத்தில் தமிழின உணர்வாளர்கள் சார்பில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு அப்பகுதியின் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விசை ஆனந்த் தலைமை தாங்கினார். (புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது வடகாடு கிராமம். இது புதுக்கோட்டை காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் புஷ்பராஜின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.)திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவன்னண், திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, ஓவியர் புகழேந்தி ஆகியோர் சிறைப்புரை ஆற்றினார்கள்.இந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் புகைப்படம் இடம்பெற்ற தட்டிகள் நூற்றுக்கணக்கில் இடம்பெற்றிருந்தன. இந்த தட்டிகளை அகற்ற வேண்டும் என்று காவல்துறையினர் கூட்ட அமைப்பாளர்களிடம் கூறினார்கள்.அப்போது கூட்டத்திற்கு தலைமை வகித்த விசை ஆனந்தின் தலைமையில் 5 பேர் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கப் போவதாக கூறினார்கள். இதையடுத்து போலீசார் அமைதியானார்கள்.மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. மூர்த்தி தலைமையில் காவல்துறையினரே பிரபாகரன் படம் இடம்பெற்றிருந்த தட்டிகளை, அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது தேமுதிக பிரமுகர் மன்மதன் தலைமையில் 15 பேர் பொதுக்கூட்ட மேடையிலேயே மண்ணெண்ணெயை தங்களின் மேல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க போவதாக கூறினார்கள்.இதையடுத்து தட்டிகளை அகற்றுவதை போலீசார் கைவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி
நக்கீரன்


அவுட்ஸோர்ஸிங்-நிறுவனங்களுக்கு ஒபாமா 'வேட்டு'!

0 commentsவெளிநாடுகளுக்கு வேலை ஒப்பந்தங்களை அளிக்கும் (அவுட்ஸோர்ஸிங்) அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச் சலுகை கிடையாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

இதில் பெரிதும் பாதிக்கப்படும நாடு இந்தியாவாகவே இருக்கும்.

அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவி ஏற்ற பிறகு அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைகளின் கூட்டுக் கூட்டம் நடந்தது. இதில் அவர் முதல் முறையாக உரை நிகழ்த்தினார் ஒபாமா.

அவர் கூறியதாவது:

ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், சரிந்து கிடக்கும் பொருளாதாரத்தை நாம் மீண்டும் புதுப்பிப்போம். சரிவில் இருந்து மீள்வோம். முன்பை விட வலுவானதாக அமெரிக்க பொருளாதாரம் உயிர்த்து எழும்.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் மின்சார உற்பத்தி, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நிதி நெருக்கடியில் சிக்கிய வங்கிகளை மீட்பதற்கு பெரும் அளவில் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் நிதி உதவி தேவைப்படுவது உண்மையே. இந்த நிதி உதவியை அரசு வழங்குவதற்கு சில எதிர்ப்புகள் இருந்தன. ஆனால் அப்படியே விட்டுவிட்டால், இது ஒவ்வொரு அமெரிக்கனையும் நேரடியாக பாதிக்கும்.

அடுத்த 2 ஆண்டுகளில் 40 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும். இந்த வேலைகளில் 90 சதவீதம் தனியார் துறையிலேயே உருவாக்கப்படும். சாலைகள் போடுதல், பாலங்கள் கட்டுதல், காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்தல் போன்ற வேலைகளில் தனியார் துறை ஈடுபடும்.

அவுட்ஸோர்ஸிங்குக்கு ஆபத்து!:

வெளிநாடுகளுக்கு வேலை ஒப்பந்தங்களை வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை தருவதில்லை என்ற புதிய முடிவை அரசு எடுத்துள்ளது.

ஒபாமாவின் இந்த அறிவிப்பு, இந்திய பி.பி.ஓ நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரம் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வேலைகளை வெளிநாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்துள்ளன.

இந்த அறிவிப்பால், இந்தியாவில் பிபிஓ தொழிலை மட்டுமே நம்பி தொடங்கப்பட்ட பல நிறுவனங்கள் பெரும் சிக்கலுக்கு ஆளாகும்.

இந்த நிறுவனங்களில் பல லட்சம் பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர்.

நன்றி
- தட்ஸ்தமிழ்


இயக்குனர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணியின் புரட்சி

1 comments

தமிழீழ மக்கள் படும் இன்னல்களை மக்களுக்கு விளக்கவும், இலங்கை அரசுக்கு துணை போகும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் ”தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்” நேற்று தொடங்கியது.

தஞ்சை சாந்தி கமலா திரையருங்கு அருகில் நடந்த தொடக்க விழாவில், இயக்குனர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, எழுத்தாளர் தூரன் நம்பி, தஞ்சை வழக்கறிஞர் சங்க செயலாளர் வழக்கறிஞர் நல்லதுரை, இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி, பயணத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ம.செந்தமிழன் ஆகியோர் பங்கேற்றனர்.

பி்ன்னர் ''காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்” கையெழுத்து இயக்கத்திற்கு முதல் கையெழுத்தை இயக்குனர் மணிவண்ணன் போட பின்னர் பலரும் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர்.

இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை நோக்கி ஒரு அணியும், வேதாரண்யம் நோக்கி ஒரு அணியும் கிளம்பிச் சென்றன. வழிநெடுகிலும் பல்வேறு கிராம மக்களிடம் பரப்புரையின் நோக்கம் குறித்தும் இலங்கை தமிழர்களின் இன்னல்கள் குறித்தும் குழுவினர் விளக்கி வருகின்றனர்.

மேலும் ”காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்” கையெழுத்து இயக்கப் படிவத்திலும் மக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.

வட தமிழ்நாடு நோக்கி செல்லும் அணிக்கு ம.செந்தமிழனும், தென் தமிழ்நாடு நோக்கி செல்லும் அணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சேசுபாலன்ராஜாவும் வழிநடத்திச் செல்கின்றனர். இந்தப் பயணக் குழுவினர் மார்ச் 6ம் தேதி சேலத்தில் நடக்கும் ”இன எழுச்சி மாநாட்டில்” சந்திக்கின்றனர்.

நன்றி
- தட்ஸ்தமிழ்


டீசல் விலை ரூ. 2 குறைகிறது

2 commentsடீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் பெட்ரோல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் நவிலை 40 டாலர்களுக்கும் கீழே போய் விட்டது. இதனால் அதற்கேற்றவாறு இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு குறைத்து வருகிறது. சமீபத்தில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் லாரி அதிபர்களின் கோரிக்கையை ஏற்று டீசல் விலையை மேலும் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி லிட்டருக்கு 2 ரூபாய் வரை டீசல் விலையில் குறைப்பு செய்யப்படவுள்ளது.

இருப்பினும் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என மத்திய பெட்ரோலியத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று டீசல் விலைக் குறைப்பு குறித்த முடிவை மத்திய அமைச்சரவை எடுத்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் விலை மேலும் குறைவதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி
- தட்ஸ்தமிழ்


அரசியல் தீர்வு காண்பதில் இலங்கை அரசுக்கு ஆர்வம் இல்லை: அமெரிக்கா

0 comments


-Photo file copy..

அரசியல் தீர்வு காண்பதில் இலங்கை அரசுக்கு ஆர்வம் இல்லை என்று அமெரிக்க எம்.பி. பாப் கேஸி கூறியுள்ளார்.

அமெரிக்க செனட் வெளியுறவு துணைக் குழுவின் தலைவரான உள்ள பாப் கேஸி எம்.பி,. கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான சண்டையில் அவர்களை முற்றிலும் களையெடுத்தாலும்கூட, தமிழர் விவகாரங்களுக்கு அரசியல் தீர்வு காண்பதில் இலஙகை அரசு ஆர்வம் காட்டாது என்றார்.

நன்றி
நக்கீரன்


பேய் பின்னால் வந்தால் சிரிப்பு - வீடியோ

0 comments


135 பேருடன் துருக்கி விமானம் விழுந்து நொறுங்கியது.

0 comments
135 பயணிகளுடன் சென்ற துருக்கி விமானம் விழுந்து நொறுங்கியது. நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் 3 துண்டுகளாக நொறுங்கியது.

cnn


காயமடைந்த வக்கீல்களுக்கு 5ஆயிரம் உதவி!

0 comments
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சேதங்கள் குறித்து ஆராய ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஞானபிரகாசம் தலைமையில் ஒரு கமிட்டியை தமிழக அரசு அமைத்துள்ளது.


இந்த கமிட்டி ஒரு மாதத்திற்குள் தன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும்.


இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரை முருகன் ’மோதல் சம்பவத்தில் காயமடைந்த வக்கீல்களுக்கு மருத்துவ உதவிக்காக ரூ.5000 இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.அவர் மேலும் 19.2.09 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக இரு தரப்புக்கும் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கண்டற்வதற்கான ஓய்வு பெற்ற நீதியரசர் ஞானப்பிரகாசம் தலைமையில் தமிழக அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.


அதையொட்டி முதலமைச்சர் கலைஞர், அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முன்னாள அமைச்சர் பூங்கோதை ஆகியோரை மருத்துவமனைகளுக்கு அனுப்பி காயமடைந்த இரு தரப்பும் பார்த்து வந்து முதலமைச்சரிடம் நிலைமைகளை விளக்கியதன் தொடர்ச்சியாக பின்வரும் அறிவிப்பினை முதல்வர் கலைஞர் அவையிலே வைக்கச்சொல்லியிருக்கிறார்கள்.

நீதியரசர் ஞானப்பிரகாசம் குழுவின் அறிக்கை வருவதற்கு சில நாட்கள் ஆகும் என்பதால் இடைக்கால உடனடி நிவாரணமாக காயம்பட்டவர்களுக்கு 5ஆயிரமும் வாகனங்கள் சேதம் அடைந்தோருக்கு அவற்றை பழுது பார்ப்பதற்காக அவரர்களுக்கு ஏற்ப இழப்பிற்கு ஏற்பவும் உதவித்தொகை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

நன்றி
- நக்கீரன்


புலிகளின் உக்கிர சமர்: இதுவரை 1,000 படையினர் பலி

0 comments
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையின் அதி சிறப்புப் படையணிகள் பலமுனைகளில் மேற்கொள்ளும் படையெடுப்பை எதிர்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் சமரில் ஈடுபட்டுள்ளனர்.
சிறிலங்கா தரைப் படையின் 53 ஆவது டிவிசன், 58 ஆவது டிவிசன், 59 ஆவது டிவிசன், சிறப்பு தாக்குதல் படைப்பிரிவு - 3 (Task Force - 3) மற்றும் சிறப்பு தாக்குதல் படைப்பிரிவு - 4 (Task Force - 4) ஆகிய அதிசிறப்பு வலிந்த தாக்குதல் படையணிகள் ஐந்து முனைகளில் இருந்து பெரும் படையெடுப்பை நிகழ்த்துகின்றன.

கடந்த மூன்று நாட்களாக இந்த ஐந்து முனை முன்னேற்றத்தை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் நிகழ்த்தும் உக்கிர சண்டையில் இதுவரை ஆகக்குறைந்தது 1,000 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3,000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளைப் பீட வட்டாரங்கள் புதினத்திடம் தெரிவித்தன.

இன்று மூன்றாவது நாளாக -

புதுக்குடியிருப்பை கைப்பற்றுவதற்கான கடும் ஐந்து முனை தாக்குதலில் சிறிலங்கா படையினரும், அவர்களை எதிர்கொண்டு கடும் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படையணிகளும் தொடர்ந்தும் கடும் சமரில் ஈடுபட்டுள்ளன.

நன்றி
- புதினம்


பரோலில் வந்த பிரேமானந்தா வாயில் இருந்து லிங்கம் எடுத்தார்!

6 comments
திருச்சி அருகே உள்ள விராலிமலையில் பாத்திமா ஆசிரம் நடத்தி வந்தவர் சாமியார் பிரேமானந்தா. பிரேமானந்தா ஆசிரமத்தில் இருந்த பிரேமகுமாரி உள்பட 2 பெண்களை கற்பழித்தார் என்றும் ரவி என்பவரை கொன்று புதைத்தார் என்றும் புகார் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1994 முதல் கடலூர் மத்திய சிறையில் இருந்து வரும் பிரேமானந்தா 14 வருடம் சிறை தண்டனையை அனுபவித்து முடித்துவிட்டார்.

அவ்வப்போது பரோலில் விடுதலையாகி பாத்திமா அசிரமத்துக்கு வந்து செல்வார். பிரேமானந்தா சிறையில் இருந்தாலும் ஆசிரமத்தில் உள்ள பள்ளி தொடர்ந்து நடந்து வருகிறது. பூஜைகளும் நடக்கின்றன.வெளிநாட்டு பக்தர்களும் வந்து செல்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரேமானந்தா ஒரு ஆயுள் தண்டனை முடிந்து விட்டதால் தன்னை விடுதலை செய்யும்படி கோர்ட்டை அணுகினார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் தனது ஆசிரமத்தில் நடக்கும் சிவராத்திரி பூஜையில் பிரேமானந்தா கலந்துகொள்வது வழக்கம். இந்த ஆண்டும் சிவராத்திரி பூஜைக்காக 6 நாள் பரோலில் பிரேமானந்தா ஆசிரமத்துக்கு வந்தார்.

கடந்த 21-ந்தேதி காலையில் ஆசிரமத்துக்கு பிரேமானந்தா வந்தார். நேற்று சிவராத்திரியையொட்டி ஆசிரமத்தில் சிறப்பு பூஜை நடந்தது.

இந்த பூஜையில் பங்கேற்ற பிரேமானந்தா வழக்கம்போல தனது வாயில் இருந்து லிங்கம் எடுத்தார். இதை பார்த்ததும் பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

நன்றி
- நக்கீரன்


சீமான் தனி மனிதன் அல்ல-பாரதிராஜா

3 commentsஇலங்கை பிரச்சனை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதைவிடவா சீமான் பேசி விட்டார் என்று இயக்குனர் பாரதிராஜா கேள்வி எழுப்பினார்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குனர் சீமானை இயக்குனர்கள் பாரதிராஜா, மணிவண்ணன், ஓவியர் புகழேந்தி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.

பின்னர் நிருபர்களிடம் பாரதிராஜா பேசுகையில்,

தமிழன் அழிவதை ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது. சீமான் உள்ளே இருப்பது தான் நல்லது. நாங்கள் அரசியல் நடத்தி ஆட்சியை பிடிக்க ஆசைப்படவில்லை. தமிழ் இனம் அழிகிறதே என்பதற்காக தான் போராட்டம் நடத்துகிறோம்.

மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியை பாதுகாப்பு கருதி பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை. ஆனால் இலங்கையில் தமிழ் இனம் அழியும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பியது. இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தப் பிரச்சினை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பேசுகிறார்கள். அதைவிடவா சீமான் பேசி விட்டார். இனப் படுகொலையை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது. சீமான் தனி மனிதன் அல்ல. அவருக்கு பின்னால் இளைஞர் பட்டாளம் உள்ளது.

இலங்கையில் பல லட்சம் தமிழர்களுக்கு அதிகாரப் பங்கீடு கேட்டு போராடுவது தவறா?. அப்படி போராடினால் இறையாண்மைக்கு எதிரா?. தமிழ் மக்களையும், தமிழ் மொழியையும் பாதுகாக்க எந்தப் போராட்டமும் நடத்துவோம் என்றார்.

நன்றி
- தட்ஸ்தமிழ்


மனித உரிமை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: ஐரோப்பிய கூட்டமைப்பு

0 commentsஇலங்கை போர் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அவ்வறிக்கையில்,’இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் உன்னிப்பாக கவனித்து வருகின்றது. அங்கு உருவாகியுள்ள மனித அவலங்கள் மற்றும் இடம் பெயர்ந்த மக்கள் கொல்லப்படுவது தொடர்பாக ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், பொது மக்களின் இழப்புக்களை தவிர்ப்பதற்கு போரில் ஈடுபடும் இருதரப்பும் அனைத்துலக மனிதாபிமான விதிகளையும், போர் விதிகளையும் மதித்தல் வேண்டும். இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் இதனை மதிக்க வேண்டும்.


வன்னியில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, மனிதாபிமான உதவிகள் அங்கு செல்வதற்கும், மக்கள் நடமாடுவதற்குமான சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும்.

விடுதலைப்புலிகள் மக்களை வெளியேற விடாது தடுப்பது கண்டனத்திற்கு உரியது.


வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு வரும் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் சோதனைகள் அனைத்துலகத்தின் தராதரத்துடன் இருத்தல் வேண்டும் என்பதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அங்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் பணியாற்றுவதற்கும் அனுமதிக்க வேண்டும்.

இந்த முகாம்களுக்கு செல்லும் முழு அதிகாரங்களும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதாபிமான அமைப்புகள் போன்ற வற்றுக்கு வழங்கப்பட வேண்டும்.


இலங்கையில் நடைபெற்றுவரும் நீண்ட காலப்போருக்கு படைத்துறை ரீதியாக தீர்வு காண முடியாது. விடுதலைப் புலிகள் வன்முறைகளை கைவிட்டு ஆயுதங்களை கீழே போட வேண்டும்.


எல்லா சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசு முன் வைக்க வேண்டும்.


இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை கொண்டுள்ளது. மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். துணை ராணுவக் குழுவினரின் ஆயுதங்கள் களையப்படவேண்டும்.


அனைத்துலகத்தின் மனித உரிமை விதிகள் அங்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.நன்றி
-நக்கீரன்


இலங்கை பிரச்சனை: பேச்சுவார்த்தை முலமே தீர்வு: அமெரிக்கா

2 comments

இலங்கையில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளது.இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரி ராபர்ட் உட் கூறுகையில், அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்துவதற்கு இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.இலங்கையில் நிலவும் மனித அவல நிலைதான் எங்களுடைய முக்கியமான கவலையாகும். போர் காரணமாக உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த மக்களின் நிலைமை எங்களை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. மோதல்களில் சிக்கிக் கொள்ளும் அப்பாவி மக்கள் குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
தமிழர் இனப்பிரச்சனைக்கு ராணுவ ரீதியாக முடிவு காணப்பட முடியாது. இதற்கு அரசியல் ரீதியாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ராபர்ட் உட் கூறினார்.விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு அமெரிக்கா சமரச முயற்சியில் ஈடுபடுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ராபர்ட் உட், நாங்கள் அந்தப் பணிக்காக கோரப்பட வில்லை.

அதே சமயம் இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும். போரை நிறுத்தி அரசியல் தீர்வு காண்பதற்கான பணிகளை இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் தான் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

நன்றி
-நக்கீரன்


இலங்கையில் உடனடியான போர் நிறுத்தம் அவசியம்: ஐ.நா. வலியுறுத்தல்

0 comments

வன்னியில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, மனிதாபிமான உதவிகள் அங்கு செல்வதற்கும் மக்கள் நடமாடுவதற்குமான சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.


இதுதொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில்,


இலங்கையின் தற்போதைய நிலமைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அங்கு உருவாகியுள்ள மனித அவலங்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் கொல்லப்படுவது தொடர்பாக நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.


பொதுமக்களின் இழப்புகளை தவிர்ப்பதற்கு போரில் ஈடுபடும் இரு தரப்பும் அனைத்துலக மனிதாபிமான விதிகளையும், போரியல் விதிகளையும் மதித்தல் வேண்டும். இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் இதனை மதிக்க வேண்டும்.


வன்னியில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, மனிதாபிமான உதவிகள் அங்கு செல்வதற்கும், மக்கள் நடமாடுவதற்குமான சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும். விடுதலைப்புலிகள் மக்கள் வெளியேறவிடாது தடுப்பது கண்டனத்திற்கு உரியது.


வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு வரும் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் சோதனைகள் அனைத்துலகத்தின் தாரதரத்துடன் இருத்தல் வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.


இந்த முகாம்களுக்கு செல்லும் முழு அதிகாரங்களும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதாபிமான அமைப்புகள் போன்றவற்றுக்கு வழங்கப்பட வேண்டும்.


இலங்கையில் நடைபெற்று வரும் நீண்டகாலப் போருக்கு படைத்துறை ரீதியாக தீர்வுகாண முடியாது. விடுதலைப்புலிகள் வன்முறைகளை கைவிட்டு ஆயுதங்களை கீழே போட வேண்டும்.


எல்லா சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.


இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை கொண்டுள்ளது.


மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். துணை ராணுவக் குழுவினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி
நக்கீரன்


ஏ.ஆர் ரகுமானுக்கு வாழ்த்துகள்!!!

0 comments


win more


சுப்பிரமணியசாமியை கைது செய்ய வேண்டும்: திருமா

0 comments

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியை கைது செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் போலீசார் அத்து மீறி நுழைந்து வக்கீல்களை தாக்கியது திட்டமிட்ட செயல் இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். ரவுடிகள் நீதிமன்ற வளாகத்தில் நுழைந்து வன்முறை நிகழ்த்த தூண்டி விட்டது சுப்பிரமணியசாமிதான். அவரது ஆட்கள் வக்கீல்கள் வேடத்தில் நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு வந்து கலவரம் செய்த சுப்பிரமணியசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார்.